Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
உதயநிதி அலுவலகத்தில் நயன்தாரா புகைப்படம் இருப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சேப்பாக்கம் தொகுதியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேற்று அமைச்சராக பொறுப்பேற்றார். அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டுத்துறை வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்வானது சமூக ஊடகங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், உதயநிதி அலுவலகத்தில் நடிகை நயன்தாரா இடம்பெற்றதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
உதயநிதி அலுவலகத்தில் நயன்தாரா புகைப்படம் இருப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, அதன் உண்மைத்தன்மை குறித்து அறிய, வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அதுக்குறித்து தேடினோம்.
இத்தேடலில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிந்தது. கோவை கிணத்துக்கடவு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் என்பவர் ஜூலை 3, 2021 அன்று புகைப்படம் ஒன்றை அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை ‘அடிமை’ என்று குறிப்பிட்டு டிவீட் செய்திருந்தார்.
அவர் பகிர்ந்த புகைப்படத்தில் அன்பில் மகேஷ் நிற்க, உதயநிதி ஸ்டாலின் இருக்கையில் அமர்ந்திருந்தார். மேலும் சுவற்றில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இதே புகைப்படத்தை பலரும் அச்சமயத்தில் பகிர்ந்திருந்ததை காண முடிந்தது. அதை இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இந்த படத்தில் முதல்வரின் படம் இருந்த இடத்தில் நயன்தாராவின் படத்தை மாற்றி எடிட் செய்து உதயநிதி அலுவலகத்தில் நயன்தாரா புகைப்படம் இருந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான புகைப்படத்தையும், எடிட் செய்த புகைப்படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
Also Read: கட்டணமில்லா பேருந்து ரத்து; அரசு பேருந்து கட்டணம் உயர்வு… வைரலாகும் செய்தி உண்மையானதா?
Conclusion
உதயநிதி அலுவலகத்தில் நயன்தாரா புகைப்படம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்ட போலியான படம் என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Sources
Tweet, from Shanmugam_MLA, Dated July 03, 2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.