Sunday, December 21, 2025

Fact Check

வாரிசு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காப்பியடிக்கப்பட்டதா?

banner_image

வாரிசு ஃபர்ஸ்ட் லுக் காப்பியடிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகின்றது.

வாரிசு ஃபர்ஸ்ட் லுக் காப்பியடிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படம் வாரிசு. விஜட் பிறந்தநாளை முன்னிட்டு இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழுவினரால் கடந்த புதனன்று (ஜூன் 22) வெளியிடப்பட்டது.

இந்நிலையில் வாரிசு படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் ஓட்டோ நிறுவனத்தின் விளம்பரப் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வாரிசு ஃபர்ஸ்ட் லுக் காப்பியடிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்  - -01

Twitter Link | Archive Link

வாரிசு ஃபர்ஸ்ட் லுக் காப்பியடிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் 02

Facebook Link

வாரிசு ஃபர்ஸ்ட் லுக் காப்பியடிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் 03

Facebook Link

Also Read: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல்கலாம் மற்றும் வாஜ்பாய் பெயரில் ஊக்கத்தொகை அறிவித்துள்ளாரா பிரதமர்?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

வாரிசு ஃபர்ஸ்ட் லுக் காப்பியடிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக, வாரிசு ஃபர்ஸ்ட் லுக் காப்பியடிக்கப்பட்டதாக கூறப்படும் ஓட்டோ நிறுவனத்தின் விளம்பர படத்தை கூர்மையாக் உற்று நோக்கினோம். இதில் விஜய் தலைக்கு பதிலாக துல்கர் சல்மானின் தலை மாற்றி வைத்ததற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதை காண முடிந்தது. போதாதற்கு வாரிசு படத்தின் டேக் லைனான “THE BOSS RETURNS” என்பதும் அதில் காணப்பட்டது.

Altered Photo
Source: Google Maps

இதனடிப்படையில் பார்க்கையில் வாரிசு படத்தின் உண்மையான ஃபர்ஸ் லுக் போஸ்டரை எடிட் செய்து, அதை ஓட்டோ விளம்பரம் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றதா என்ற சந்தேகம் நமக்கு ஏற்பட்டது. இதனையடுத்து வைரலாகும் விளம்பரப் புகைப்படத்தை ஓட்டோ வெளியிட்டுள்ளதா என உறுதி செய்ய, ஓட்டோ நிறுவனத்தின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம்.

இதில்  ஓட்டோ நிறுவனம் மேற்கண்ட படத்தை வெளியிட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. மாறாக வைரலாகும் புகைப்படத்திற்கும் ஓட்டோ  நிறுவனத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ஓட்டோ நிறுவனம் அளித்த அறிக்கை நமக்கு கிடைத்தது.

அந்த அறிக்கையில்,

எங்களுடையே அனைத்து விளம்பரங்களுமே அசலாகத்தான் இருக்கும். நாங்கள் அறிவுசார் சொத்துரிமை மீறலை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். வாரிசு பட போஸ்டர் ஓட்டோவின் விளம்பரத்துடன் தொடர்புடையது அல்ல. அது சில மீம் கிரியேட்டர்களால் பொழுதுபோக்குக்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. வாரிசு படக்குழுவுக்கு எங்கள் தரப்பிலிருந்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Instagram will load in the frontend.

இதனைடிப்படையில் பார்க்கையில் வாரிசு படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் காப்பியடிக்கப்பட்டது அல்ல என்பது தெளிவாகின்றது.

Also Read: ஸ்டெர்லைட் ஆலை மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிறுவனமாக நடத்தப்படும் என்றாரா கனிமொழி?

Conclusion

வாரிசு ஃபர்ஸ்ட் லுக் காப்பியடிக்கப்பட்டது என்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: Altered Photo

Sources

Otto’s post posted on Instagram on June 23, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

image
உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91-9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in​. என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். மேலும், எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.
Newchecker footer logo
ifcn
fcp
fcn
fl
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

20,641

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage