வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact CheckPoliticsதமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா?

தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்கவிருக்கும் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல சமயங்களில் பல காரணங்களால் இந்தி திணிப்புக்கு எதிரான குரல்கள் அவ்வப்போது ஒலித்து வருகின்றது.

இந்நிலையில், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியின் முன்பகுதியில் ‘தமிழ்நாடு’ என்பது இந்தியில் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக நக்கீரன் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை கண்ட பலரும் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.  

டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்கவிருக்கும் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக பரவும் தகவல்
Screengrab from Facebook/ இரணியன்
டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்கவிருக்கும் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக பரவும் தகவல்
Screengrab from Facebook/ jmprabhakaranbsc
டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்கவிருக்கும் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக பரவும் தகவல்
Screengrab from Facebook/ valluvan.valluvan.52643

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: விஜய் பட்டா கத்தியுடன் வாரிசு வெற்றியை கொண்டாடியதாக பொய் செய்தி வெளியிட்ட தினமலர்!

Factcheck / Verification

டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்கவிருக்கும் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து இதுக்குறித்த ஆய்வை தொடங்கினோம்.

முன்னதாக தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் தமிழ் மொழி இடம்பெற்றதா என்பதை உறுதி செய்ய இதுக்குறித்து தேடினோம். இத்தேடலில் ஐ தமிழ் நியூஸ் முந்தைய நேற்று (23/01/2023) டெல்லியில் நடந்த ஒத்திகை நிகழ்வில் தமிழ்நாடு ஊர்தி கலந்துக்கொண்ட வீடியோவை பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

அவ்வீடியோவை உற்று நோக்கியதில் தமிழக ஊர்தியின் பக்கவாட்டு பகுதியில் தமிழ்நாடு என்று தமிழில் எழுதி இருப்பதை காண முடிந்தது.  

டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்கவிருக்கும் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக பரவும் தகவல்

தொடர்ந்து தேடுகையில் தமிழக அலங்கார ஊர்தியின் இரண்டு பக்கவாட்டு பகுதிகளில் தமிழிலும், முன்பக்கத்தில் இந்தியிலும், பின்பக்கத்தில் ஆங்கிலத்திலும் ‘தமிழ்நாடு’ என்ற வார்த்தை எழுதப்பட்டிருந்ததாக தினமலர் செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. இதனடிப்படையில் காண்கையில் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது.

இந்த தேவையில்லாத சர்ச்சைக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது நக்கீரன் வெளியிட்ட செய்தியேயாகும். நக்கீரன் வெளியிட்ட செய்தியில்“தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியின் முன்பகுதியில் ‘தமிழ்நாடு’ என்பது இந்தியில் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக குடியரசு தின விழாவில் கலந்துக் கொள்ளும் அலங்கார ஊர்திகளுக்கு சில நெறிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அவற்றுள் அலங்கார ஊர்திகளின் முகப்பு பக்கத்தில் மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்களின் பெயர் இந்தியிலும், பின்பக்கத்தில் ஆங்கிலத்திலும், பக்கவாட்டு பகுதிகளில் அந்த மாநிலத்தின் மொழியிலும் இடம்பெற வேண்டும் என்பதும் ஒன்றாகும்.

Tableaux Selection process norms

இதனையடுத்து இதற்கு முன்னர் நடந்த குடியரசு தின விழாக்களில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்ட அலங்கார ஊர்தியின் முகப்பு பக்கத்தில் எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தது என்பது குறித்து தேடினோம்.

இதில் 2017, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு சார்பில் கலந்துக் கொண்ட அலங்கார ஊர்திகளின் வீடியோக்களை டிடி நியூஸ், பிரித்வி இந்தியா மற்றும் சன்சத் டிவி யூடியூப் சேனல்களில் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. இதில் அனைத்திலும் தமிழ்நாட்டு அலங்கார ஊர்திகளின் முகப்பு பக்கத்தில் தமிழ்நாடு என்று இந்தியிலேயே எழுதப்பட்டிருந்தது.

2017 அலங்கார ஊர்தி:-

2020 அலங்கார ஊர்தி:-

2021 அலங்கார ஊர்தி:-

தொடர்ந்து தேடுகையில் தமிழ்நாடு மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் முகப்பு பக்கங்களில் இந்தியிலேயே அம்மாநில பெயர் எழுதப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதனடிப்படையில் காண்கையில் டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் கலந்துக் கொள்ளும் ஊர்தியானது எம்மாநிலத்தை சேர்ந்திருந்தாலும் அதன் முகப்பு பக்கத்தில் அம்மாநிலத்தின் பெயர் இந்தியிலேயே எழுதப்பட்டு வருகின்றது என்பதை அறிய முடிகின்றது.

ஆகவே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் ஒரு விஷயத்தை புதியதான ஒரு விஷயமாக சித்தரித்து தேவையில்லாத ஒரு சர்ச்சையை நக்கீரன் ஏற்படுத்தியுள்ளது என்பது இதன்மூலம் தெளிவாகின்றது.

Also Read: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 2 கிராம் தங்க காசு வழங்க திமுக திட்டமிட்டுள்ளதா?

Conclusion

டெல்லி குடியரசு தின விழாவில் பங்கேற்கவிருக்கும் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Sources

Tweet from I Tamil news dated 23 Jan, 2023
Report from Dinamalar dated 25 Jan, 2023
Youtube Video from Sansad Tv, DD News, Prithvi India, and Doordarshan Podhigai
Tableaux Selection process norms


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular