ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 2 கிராம் தங்க காசு வழங்க திமுக திட்டமிட்டுள்ளதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா சமீபத்தில் காலமானார். இதனால், அந்தத் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் 27-ஆம் தேதி ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், இந்த இடைத் தேர்தலில் கொலுசுக்கு பதிலாக 2 கிராம் தங்க காசு வழங்க திமுக திட்டமிட்டுள்ளது என்று குறிப்பிட்டு நியூஸ் 7 தமிழ் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஆளுநர் அளித்த விருந்தில் கலந்து கொண்டாரா அமைச்சர் பொன்முடி? உண்மை என்ன?
Fact Check/Verification
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் 2 கிராம் தங்க காசு வழங்க திமுக திட்டமிட்டுள்ளதாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
முன்னதாக வைரலாகும் நியூஸ்கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதா என உறுதிசெய்ய அந்நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில் இதுக்குறித்து தேடினோம். இத்தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நியூஸ் 7 தமிழ் வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் தலைவர் சுகிதா சாரங்கராஜைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டது என்று தெளிவு செய்தார்.
Also Read: இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் தலைவாழை விருந்து என்று பரவும் கனடா வீடியோ!
Conclusion
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் 2 கிராம் தங்க காசு வழங்க திமுக திட்டமிட்டுள்ளதாக நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக உருவாக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Phone Conversation with Sugitha Sarangaraj, Digital Head, News 7 Tamil, Dated January 23, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)