வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact Checkஉதயநிதி ஸ்டாலின் கனடாவில் நடிகைகளுடன் இருப்பதாக பரவும் புகைப்படம்!

உதயநிதி ஸ்டாலின் கனடாவில் நடிகைகளுடன் இருப்பதாக பரவும் புகைப்படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கனடாவில் நடிகைகளுடன் இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

உதயநிதி ஸ்டாலின் கனடாவில் நடிகைகளுடன் இருப்பதாக  பரவும் புகைப்படம்

“தந்தை கோவிட்டால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பலத்தை நிரூபிக்க குடியரசு தலைவர் தேர்தலில் ஒவ்வொரு எம்.எல்.ஏவின் ஓட்டும் முக்கியம். இந்த மாதிரியான சூழலில் உதயநிதி ஸ்டாலின் எதற்காக தாய்லாந்து வழியாக கனடா சென்றுள்ளார்” என்று சவுக்கு சங்கர் என்பவர் நேற்று டிவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

Archive Link

இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கனடாவில் நடிகைகளுடன் இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

உதயநிதி ஸ்டாலின் கனடாவில் நடிகைகளுடன் இருப்பதாக  பரவும் புகைப்படம் - 01

Twitter Link | Archive Link

உதயநிதி ஸ்டாலின் கனடாவில் நடிகைகளுடன் இருப்பதாக  பரவும் புகைப்படம் - 02

Facebook Link

உதயநிதி ஸ்டாலின் கனடாவில் நடிகைகளுடன் இருப்பதாக  பரவும் புகைப்படம் - 03

Facebook Link

Also Read: எடப்பாடி பழனிசாமி குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவும் விஷம பதிவு!

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கனடாவில் நடிகைகளுடன் இருப்பதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, அப்புகைப்படத்தின் உண்மை பின்னணி குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.

இதில் வைரலாகும் படம் உதயநிதி நடிப்பில் வெளிவந்த நெஞ்சுக்கு நீதி படத்தின் 50 ஆம் நாள் விழாவில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது.

இப்படத்தில் படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நடிகைகளான தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் உள்ளிட்டோருடன் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் எக்ஸிகியூட்டிவ் புரொடியூஸர் ராகுலும் இருப்பதை காண முடிகின்றது.

Nenjukku neethi success meet

இதில் ராகுலின் படத்தை மட்டும் நீக்கிவிட்டு உதயநிதி கனடாவில் நடிகைகளுடன் இருக்கும் படம் என்று சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

comparison image

Also Read: 140 என்று தொடங்கும் எண்ணிலிருந்து வரும் ஃபோன் அழைப்புகளுக்கு பதிலளித்தால் வங்கி கணக்கிலிருக்கும் பணம் திருடப்படுமா?  

Conclusion

திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் கனடாவில் நடிகைகளுடன் இருப்பதாக கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் படம், உண்மையில் நெஞ்சுக்கு நீதி  50 ஆவது நாள் விழாவில் எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.

Result: Missing Context

Sources

India Glitz thread, Tweeted on 11/07/2022

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular