வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkஅமித் ஷாவும் யோகி ஆதித்யநாத்தும் முகக் கவசம் இல்லாமல் நீராடினார்களா?

அமித் ஷாவும் யோகி ஆதித்யநாத்தும் முகக் கவசம் இல்லாமல் நீராடினார்களா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பல்லாயிரக்கணக்கான சாதுக்கள் சூழ, முகக் கவசம் இல்லாமல் அமித் ஷாவும் யோகி ஆதித்யநாத்தும் பொது வெளியில் நீராடியதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அமித் ஷாவும் யோகி ஆதித்யநாத்தும் முகக்கவசம் இல்லாமல் பொது வெளியில் நீராடியதாகக் கூறி பரவும் படம்

இந்தியாவில் கொரானாவின் இரண்டாம் அலை அதிக அளவு பாதிப்புளை ஏற்படுத்தி வருகின்றது. தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளிகளைப் பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை மக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றது.

இந்நிலையில் அமித் ஷாவும்  யோகி ஆதித்யநாத்தும் ஆயிரக்கணக்கான சாதுக்கள் சூழ நீராடும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, ஒரு மத்திய அமைச்சர் ஒரு மாநில முதல்வர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஒருவர் கூட மாஸ்க் அணியவில்லை ஏன் ? ஊருக்கு தான் உபதேசமா?”  என்று சிலர் பதிவு ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அமித் ஷாவும் யோகி ஆதித்யநாத்தும் முகக்கவசம் இல்லாமல் பொது வெளியில் நீராடியதாகக் கூறி பரவும் பதிவு - 1

Archive Link: https://archive.ph/NLCYi

அமித் ஷாவும் யோகி ஆதித்யநாத்தும் முகக்கவசம் இல்லாமல் பொது வெளியில் நீராடியதாகக் கூறி பரவும் பதிவு - 2

Archive Link: https://archive.ph/PQWZG

அமித் ஷாவும் யோகி ஆதித்யநாத்தும் முகக்கவசம் இல்லாமல் பொது வெளியில் நீராடியதாகக் கூறி பரவும் பதிவு - 3

Archive Link: https://archive.ph/EXmxF

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படத்தின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய அப்புகைப்படம் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

அமித் ஷாவும் யோகி ஆதித்யநாத்தும் முகக் கவசம் இல்லாமல் கூட்டமாக நீராடியதாக கூறி சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று பரவியதைத் தொடர்ந்து, இப்புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் சர்ச்  (Google Reverse Search) முறையில் ஆய்வு செய்தோம்.

இவ்வாறு செய்ததன் மூலம் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் புகைப்படத்தின் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மை குறித்து நம்மால் அறிய முடிந்தது.

முகக்கவசம் இல்லாமல் அமித் ஷாவும் யோகி ஆதித்யநாத்தும் நீராடும் புகைப்படம், உண்மையில் 2019 ஆம் ஆண்டு பிரயாக்ராஜில் நடைப்பெற்ற கும்பமேளாவில் எடுக்கப்பட்டதாகும்.

இதுக்குறித்த செய்தி அப்போது பல ஊடகங்களில் வெளிவந்திருந்தது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.

மேற்கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கும்போது,  அமித் ஷாவும் யோகி ஆதித்யநாத்தும் முகக் கவசம் இல்லாமல் நீராடினார்கள் என்று கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படம் பழையப் புகைப்படம் என்பது தெளிவாகின்றது.

Conclusion

பல்லாயிரக்கணக்கான சாதுக்கள் சூழ, முகக் கவசம் இல்லாமல் அமித் ஷாவும் யோகி ஆதித்யநாத்தும் பொது வெளியில் நீராடியதாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் புகைப்படம், 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழையப் படம் என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Misleading

Our Sources

Hindustan Times: https://www.hindustantimes.com/india-news/amit-shah-yogi-adityanath-take-holy-dip-in-sangam-during-kumbh-mela/story-EeJ4AVUXL8XXxycPPOCLjL.html

Free Press Journal: https://www.freepressjournal.in/india/amit-shah-takes-dip-at-kumbh

NDTV: https://www.ndtv.com/india-news/kumbh-mela-2019-amit-shah-yogi-adityanath-take-holy-dip-at-kumbh-mela-1992926


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular