வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkவிநாயகர் சதுர்த்தி அன்று கே.டி.ராகவன் படத்தினை பிரதமருக்கு அனுப்புவோம் என்று அறிவிப்பு வெளியிட்டதா தமிழக பாஜக?

விநாயகர் சதுர்த்தி அன்று கே.டி.ராகவன் படத்தினை பிரதமருக்கு அனுப்புவோம் என்று அறிவிப்பு வெளியிட்டதா தமிழக பாஜக?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

விநாயகர் சதுர்த்தி அன்று கே.டி.ராகவன் படத்தினை மோடிஜி அவர்களுக்கு அனுப்பி பயனடைவோம் என்பதாக புகைப்படச் செய்தி ஒன்றினை தமிழக பாஜக தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருப்பதாக புகைப்படம் வைரலாகிறது.

விநாயகர் சதுர்த்தி
Source: Facebook

தமிழக பாஜகவில் மாநில பொதுச்செயலாளராக அங்கம் வகித்த கே.டி.ராகவன் குறித்த பாலியல் குற்றச்சாட்டு வீடியோ ஒன்று சமீபத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தொடர்ந்து, இந்த வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை அறிவுருத்தலின்படியே இதனை வெளியிட்டதாகத் தெரிவித்திருந்தார். இதுகுறித்து, பல்வேறு சர்ச்சைகள் இன்னும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், “தமிழக மக்களுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் பணிவான வேண்டுகோள் வினாயகர் சதுர்த்தி அன்று நம்ம ராகவன் படத்தினை மோடிஜி அவர்களுக்கு அனுப்பி பயனடைவோம்” என்று பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை சார்பில் தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

விநாயகர் சதுர்த்தி
source: Facebook

Facebook Link

விநாயகர் சதுர்த்தி
Source: Facebook

Facebook Link

Also Read: யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் மனநிலை பாதிக்கப்பட்டவர்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification:

விநாயகர் சதுர்த்தி அன்று கே.டி.ராகவன் படத்தினை மோடிஜி அவர்களுக்கு அனுப்பி பயனடைவோம் என்று தமிழக பாஜக சார்பில் செய்தி வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் இதுபோன்ற புகைப்பட அறிவிப்பு எதுவும் வெளியாகியிருக்கிறதா என்று தேடியபோது, “மாற்று மதப் பண்டிகைகளுக்கு மனமார வாழ்த்து சொல்லும் நம் மாநில முதல்வருக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை நாம் அனைவரும் ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பி வைப்போம்” என்கிற அறிவிப்பு மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை சார்பில் வெளியாகியிருந்தது.

விநாயகர் சதுர்த்தி
Source: Facebook

Facebook Link

குறிப்பிட்ட அந்த டெம்ப்ளேட் புகைப்படத்தை எடிட் செய்தே தற்போது வைரலாகும் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர் என்பதும் நமக்கு உறுதியானது.

Source: Facebook

எடிட் செய்யப்பட்டது

Source: Facebook

உண்மையான புகைப்படம்

இதுகுறித்து, தமிழக பாஜகவினர் மூலமாக, வைரல் அறிவிப்பு புகைப்படம் போலி என்பதை உறுதிப்படுத்திக் கொண்டோம்.

Conclusion:

விநாயகர் சதுர்த்தி அன்று கே.டி.ராகவன் படத்தினை மோடிஜி அவர்களுக்கு அனுப்பி பயனடைவோம் என்று தமிழக பாஜக சார்பில் செய்தி வெளியிட்டதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources:

Tamil Nadu BJP

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular