திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkடாஸ்மாக் கடைக்கு கலைஞர் கருணாநிதி பெயர் என்று பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

டாஸ்மாக் கடைக்கு கலைஞர் கருணாநிதி பெயர் என்று பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: டாஸ்மாக்கிற்கு கலைஞர் கருணாநிதி பெயர் 

Fact: வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும். 

டாஸ்மாக் கடைக்கு கலைஞர் கருணாநிதி பெயரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூட்டியுள்ளதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

“எல்லா திட்டங்களுக்கும் கலைஞர் பெயரை வைப்பது போல டாஸ்மாக்குக்கும் அவர் பெயரை வைக்க வேண்டும்.
கோரிக்கை நிறைவேற்றப்பட்டது – ஸ்டாலின்”
என்று இந்தப்புகைப்படம் பரவி வருகிறது.

டாஸ்மாக்
Screenshot from Twitter @SURULIVEL1971

Archived Link

Screenshot from Facebook/TamilanPandiyan

Facebook Link

Screenshot from Facebook/ADMKFAN

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ‘நரக பேருந்து நிலையம்’ என்று எழுத்துப்பிழையுடன் முகப்புப் பலகை வைத்ததா கோவை மாநகராட்சி?

Fact Check/Verification

டாஸ்மாக் மதுபானக் கடைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் வைக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படம்  குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது கடந்த பல ஆண்டுகளாகவே இந்த கடை எண் 860 என்னும் டாஸ்மாக்கின் புகைப்படம் பல்வேறு செய்திகளிலும் உபயோகப்படுத்தப்பட்டு வருவது நமக்குத் தெரிய வந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு Times of India வெளியிட்டிருந்த டாஸ்மாக் குறித்த செய்தியில் வைரல் புகைப்படத்தின் உண்மையான புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

” நாளை முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்”  என்று கடந்த 2021ஆம் ஆண்டு சன் நியூஸ் வெளியிட்டுள்ள நியூஸ்கார்டில் இக்கடை இடம்பிடித்துள்ளது. அதில், டாஸ்மாக் மதுபானக்கடை என்றே போர்டில் எழுதப்பட்டுள்ளது.

சன்நியூஸ் மட்டுமின்றி, புதியதலைமுறை உள்ளிட்ட முன்னணி ஊடகங்களின் மதுக்கடைகள் குறித்த செய்திகளிலும் இப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

எனவே, குறிப்பிட்ட புகைப்படத்தை எடுத்தே தற்போது அரசு மதுபான கடைக்கு கலைஞர் மதுபானக்கடை என்று பெயர் மாற்றப்பட்டதாக எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பது உறுதியாகியது.

Also Read: அண்ணாமலை பாதயாத்திரையை அதிமுக புறக்கணிக்கும் என்றாரா ஜெயக்குமார்?

Conclusion

டாஸ்மாக் மதுபானக் கடைக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் வைக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
News Report From, TOI, Dated November 01, 2017
Twitter Post From, Sun News, Dated May 05, 2021


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular