ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 16, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 16, 2024

HomeFact Checkபிக்பாஸ் வாக்குகளை மறுகூட்டல் செய்ய வேண்டும் என்றாரா தமிழ்கேள்வி செந்தில்வேல்?

பிக்பாஸ் வாக்குகளை மறுகூட்டல் செய்ய வேண்டும் என்றாரா தமிழ்கேள்வி செந்தில்வேல்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பிக்பாஸ் வாக்குகளை மறுகூட்டல் செய்ய வேண்டும் என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக ஸ்கிரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பிக்பாஸ் வாக்குகளை மறுகூட்டல் செய்ய வேண்டும் என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக பரவும் தகவல்

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விசிகவைச் சேர்ந்த விக்ரமன் கலந்துக் கொண்டார். இப்போட்டியின் இறுதி வாரத்தில் இவருக்கு வாக்களிக்கும்படி விசிக தலைவர் திருமாவளவன் டிவீட் செய்திருந்தார். இருப்பினும் விக்ரமன் இப்போட்டியில் வெல்ல முடியவில்லை. அவருக்கு இரண்டாம் இடமே கிடைத்தது.

இந்நிலையில், ” ஐரோப்பாவில் உள்ள தோழர்கள் எல்லாம் குடும்பம் குடும்பமாக #Vikraman க்கு தான் வாக்களித்தாக கூறினார்கள் பார் முழுவதும் இப்படி தோழரின் புகழ் பரவி இருந்தும் வீழ்ந்தது எப்படி? #Bigboss போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் நடக்கும் வாக்கு எண்ணிக்கையையும் மறு கூட்டல் செய்ய சட்டம் இயற்ற வேண்டும் ” என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிக்பாஸ் வாக்குகளை மறுகூட்டல் செய்ய வேண்டும் என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக பரவும் தகவல் - 01
Screenshot from Twitter @JSKGopi
பிக்பாஸ் வாக்குகளை மறுகூட்டல் செய்ய வேண்டும் என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக பரவும் தகவல் - 02
Screenshot from Facebbok/anbarasu.as
பிக்பாஸ் வாக்குகளை மறுகூட்டல் செய்ய வேண்டும் என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக பரவும் தகவல் - 03
Screenshot from Facebbok/viveka.anandhan.54

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact Check/Verification

பிக்பாஸ் வாக்குகளை மறுகூட்டல் செய்ய வேண்டும் என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாகக் கூறி வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் உண்மைத்தன்மை குறித்து அறிய டிவிட்டர் அட்வான்ஸ்ட் சர்ச் (Twitter Advanced Search) முறையை பயன்படுத்தி வைரலாகும் டிவீட் குறித்து தேடினோம்.

இவ்வாறு தேடியதில் செந்தில் வேல் அவர்களின் டிவீட் என்று வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட்டின் பின்புலத்தில் இருந்த உண்மைத்தன்மை நமக்கு தெளிவாகியது.

உண்மையில் செந்தில்வேல் பதிவிட்டதாக வைரலாகும் டிவீட், செந்தில்வேல் அவர்களால் பதிவிட்டதே அல்ல; அது செந்தில் வேல் பெயரில் இயங்கும் போலிக் கணக்கிலிருந்து பதிவிட்டதாகும்.

செந்தில்வேல் அவர்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கின் ஐடி @Senthilvel79 என்பதாகும். ஆனால் வைரலாகும் டிவீட் @Senthillvel79 (இதில் ஒரு ‘l’ கூடுதலாக உள்ளது) என்கிற ஐடியிலிருந்து பதிவிடப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வாக்குகளை மறுகூட்டல் செய்ய வேண்டும் என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக பரவும் தகவல் - 01
Screen shot of Parody Account

வாசகர்களின் புரிதலுக்காக செந்தில்வேல் அவர்களின் உண்மையான டிவிட்டர் கணக்கையும், அவர் பெயரில் இயங்கும் போலி கணக்கையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

பிக்பாஸ் வாக்குகளை மறுகூட்டல் செய்ய வேண்டும் என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக பரவும் தகவல் - 01

இதேபோல் செந்தில்வேல் பெயரில் இயங்கும் போலிக் கணக்கிலிருந்து பதிவு செய்யப்பட்ட பல டிவீட்டுகள் சமூக வலைத்தளங்களில் இதற்கு முன்னர் வைரலாகியுள்ளது. அவற்றையெல்லாம் நியூஸ்செக்கர் சார்பில் ஆய்வு செய்து தெளிவு படுத்தியுள்ளோம்.

Conclusion

பிக்பாஸ் வாக்குகளை மறுகூட்டல் செய்ய வேண்டும் என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் டிவீட் செய்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் ஸ்க்ரீன்ஷாட் உண்மையில் அவர் பெயரில் இயங்கும் போலிக் கணக்கில் பதிவிடப்பட்டது என்பதை கிடைத்த ஆதாரங்களின் மூலம் தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False/ImposterContent

Sources

Tweet, Senthilvel Parody Account’s Thread, Dated on Jan 22, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular