Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா தலைமறைவு என நியூஸ்கார்டுகள் சமூக வலைத்தளங்களங்களில் பரவி வருகின்றது.
பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தில் உள்ள பெண்களை விமர்சித்துள்ளார். இதையடுத்து, பெண்களை அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஹெச்.ராஜா தலைமறைவானதாக கூறி தந்தி தொலைக்காட்சி மற்றும் புதிய தலைமுறையின் நியூஸ்கார்டுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Also Read: பெண்களுக்காக 9969777888 எனும் உதவி எண்ணை தமிழக காவல்துறை அறிவித்துள்ளதா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
ஹெச்.ராஜா தலைமறைவு என தந்தி தொலைக்காட்சி மற்றும் புதிய தலைமுறையின் நியூஸ்கார்டுகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இந்த நியூஸ்கார்டுகளை இவ்விரு ஊடகங்களும் வெளியிட்டதா என்பதனை அந்த ஊடகங்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
அதில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை இவ்விரு ஊடகங்களும் வெளியிடவில்லை என்பது நமக்கு உறுதியானது. ஆனால் தந்தி தொலைக்காட்சியில் எச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் கொடுத்த தகவல் நியூஸ்கார்டாக வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
இந்த நியூஸ்காட்டை எடிட் செய்தே மேற்கண்ட தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இதை வாசகர்களுக்கு தெளிவுப்படுத்த அவ்விரு நியூஸ்கார்டுகளையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறைப் பொறுப்பாளரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து கேட்டோம். அதற்கு அவர், “இது பொய்யான நியூஸ்கார்ட், இதை நாங்கள் வெளியிடவில்லை” என விளக்கமளித்தார்.
இதன்பின் புதிய தலைமுறை நியூஸ்கார்ட் குறித்த உண்மையை அறிய புதிய தலைமுறை டிஜிட்டல் துறைப் பொறுப்பாளரைத் தொடர்புக் கொண்டோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என நமக்கு தெளிவுப்படுத்தினார்.
Also Read: எச்.ராஜா எனக்கு தந்தை போன்றவர் என்று சீமான் கூறியதாக வதந்தி!
Conclusion
பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா தலைமறைவு என சமூக வலைத்தளங்களங்களில் பரவும் தந்தி தொலைக்காட்சி மற்றும் புதிய தலைமுறையின் நியூஸ்கார்டுகள் போலியாக எடிட் செய்யப்பட்டவை என்பதனை உரிய ஆதாரங்களுடன் விளக்கி உள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Puthiya Thalaimurai and Thanthi Tv’s Digital team’s Testimonials
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.