Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவும், பாஜகவின் தேசிய மகளிர் அணித்தலைவியுமான வானதி சீனிவாசனின் கணவர் சீனிவாசனுக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பதாக செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
முன்னதாக, வானதி சீனிவாசன் திமுகவில் இணைய இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் சமூக வலைத்தளத்தில் உலா வரும் நிலையில் அவரது கணவர் குறித்து இவ்வாறு செய்தி பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக ஆட்சியில் அரசு பேருந்து படிக்கட்டு உடைந்ததாக பரப்பப்படும் பழைய படம்!
Fact Check/Verification
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் கணவர் சீனிவாசனுக்கு ஹெச்ஐவி தொற்று என்பதாக செய்தி வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்த உண்மையை அறிய அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.
வைரலாகும் புகைப்படச் செய்தி தினமலரின் செய்தி போன்று பரவி வரும் நிலையில், ரிவர்ஸ் சர்ச் மற்றும் முக்கிய வார்த்தைகள் தேடலில், தினமலரில் வெளியான “வானதி கணவர் சீனிவாசனுக்கு வி.எச்.பியில் பதவி” என்கிற செய்தி நமக்குக் கிடைத்தது.
குறிப்பிட்ட செய்தியில் அமைந்திருக்கும் வி.எச்.பியில் பதவி என்கிற வார்த்தைகளை மட்டும் எடிட் செய்து ஹெச்ஐவி தொற்று என்று இணைத்து சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர் என்பது நமக்கு உறுதியானது. அதனை இங்கே நாம் ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.
மேலும், வைரலாகும் செய்தி குறித்து வானதி சீனிவாசனிடம் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், “குறிப்பிட்ட செய்தி போலியானது; எங்களது மரியாதையை குலைக்கும் வகையில் இச்செய்தி பரப்பப்படுகிறது” என்று விளக்கமளித்தார்.
Also Read: 2022ஆம் ஆண்டின் ஆசியாவின் மிக மோசமான நாணயமாக இடம் பிடித்துள்ளதா இந்திய ரூபாய்? உண்மை என்ன?
Conclusion
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனின் கணவர் சீனிவாசனுக்கு ஹெச்ஐவி தொற்று என்பதாகப் பரவும் செய்தி போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Article, From Dinamalar, Dated January 03, 2023
Phone Conversation, With Vanathi Srinivasan, Dated January 03,2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.