திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkமேகதாது அணை கட்டுவதை எதிர்ப்பவர்கள் சனாதன கைக்கூலிகள் என்றாரா விசிக கட்சித்தலைவர் திருமாவளவன்?

மேகதாது அணை கட்டுவதை எதிர்ப்பவர்கள் சனாதன கைக்கூலிகள் என்றாரா விசிக கட்சித்தலைவர் திருமாவளவன்?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: மேகதாது அணை கட்டுவதை எதிர்ப்பவர்கள் அனைவரும் சனாதன கைக்கூலிகள் – திருமாவளவன்

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக பரவி வருகிறது. 

மேகதாது அணை கட்டுவதை எதிர்ப்பவர்கள் அனைவரும் சனாதன கைக்கூலிகள் என்று விசிக கட்சித்தலைவர் திருமாவளவன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.

“திராவிட நாட்டை சிதைக்க சதி. கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டுவதை எதிர்ப்பவர்கள் அனைவரும் சனாதன கைகூலிகள்! இவர்களே திராவிட நாட்டை உடைக்க சதி செய்கிறார்கள்! – டி.கே.சிவக்குமார் அறிவிப்பை ஆதரித்து திருமாவளவன் எம்.பி. பேச்சு” என்று இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.

மேகதாது அணை
Screenshot from Twitter @Thili21
மேகதாது அணை
Screenshot from Facebook/Mannurimaimeetpuiyakkam
Screenshot from Facebook/Rajakulasambuvaraiyar

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கேரளாவில் ஆர்எஸ்எஸ் பெண் முஸ்லீம்களால் கொல்லப்பட்டதாக பரவும் வதந்தி!

Fact Check/Verification

 மேகதாது அணை கட்டுவதை எதிர்ப்பவர்கள் அனைவரும் சனாதன கைக்கூலிகள் என்று விசிக கட்சித்தலைவர் திருமாவளவன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்று பரவும் நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். அதில், சமீபத்தில் திருமாவளவன் மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்து பேசிய செய்தியே நியூஸ்கார்டாக வெளியாகியிருந்தது.

மேலும், திருமாவளவனுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்திலும் அவர் இவ்வாறு பேசியதாக எந்தக்கருத்தும் இடம் பெற்றிருக்கவில்லை.எனவே, இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு ஆசிரியர் சுகிதா சாரங்கராஜை தொடர்பு கொண்டு கேட்டபோது, “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று விளக்கமளித்தார்.

தொடர்ந்து, அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில், “இந்த செய்தியை நியூஸ்7 தமிழ் வெளியிடவில்லை” என்று விளக்கமளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை செய்த முஸ்லீம் நபர் கைதா?

Conclusion

மேகதாது அணை கட்டுவதை எதிர்ப்பவர்கள் அனைவரும் சனாதன கைக்கூலிகள் என்று விசிக கட்சித்தலைவர் திருமாவளவன் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook Post from, News 7 Tamil, Dated June 01, 2023

Phone Conversation with, Sugitha Sarangaraj, Digital Head, News 7 Tamil, Dated June 01, 2023


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular