வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact CheckFact Check: அதிமுகவுடனான கூட்டணியை முறிக்க அண்ணாமலைக்கு யார் அதிகாரம் தந்தது என்று கேள்வி எழுப்பினாரா...

Fact Check: அதிமுகவுடனான கூட்டணியை முறிக்க அண்ணாமலைக்கு யார் அதிகாரம் தந்தது என்று கேள்வி எழுப்பினாரா பாஜக ஹெச்.ராஜா?

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim
அதிமுக உடனான கூட்டணியை முறிக்க அண்ணாமலைக்கு யார் அதிகாரம் தந்தது? – ஹெச்.ராஜா

Fact
ஹெச்.ராஜா கூறியதாக ஜூனியர் விகடன் பெயரில் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

அதிமுகவுடனான கூட்டணியை முறிக்க அண்ணாமலைக்கு யார் அதிகாரம் தந்தது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகிறது.

“அதிமுக உடனான கூட்டணியை முறிக்க அண்ணாமலைக்கு யார் அதிகாரம் தந்தது? அதிமுக துணையின்றி ஒரு இடத்தில் நம்மால் வெல்ல முடியுமா? பாஜக-அதிமுக கூட்டணி தொடரும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்று நானும் மத்திய அமைச்சர் ஆவேன்” என்று பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் ஹெச்.ராஜா பேசியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகிறது.

Screenshot From Twitter @Surya_BornToWin
Screenshot from Twitter @KovaiHarish

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: அண்ணாமலையால் கட்சிக்கு அவப்பெயர்களே மிச்சம் என்றாரா வானதி சீனிவாசன்?

Fact Check/Verification

அதிமுகவுடனான கூட்டணியை முறிக்க அண்ணாமலைக்கு யார் அதிகாரம் தந்தது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

ஜூனியர் விகடன் பெயரில் குறிப்பிட்ட நியூஸ்கார்ட் வைரலாகிய நிலையில் ஹெச்.ராஜா அவ்வாறு பேசியதாக செய்தி எதுவும் விகடனில் வெளியாகியுள்ளதா என ஆராய்ந்தோம். அவ்வாறு எந்த செய்தியும் வெளியாகியிருக்கவில்லை.

தொடர்ந்து, இதுகுறித்து ஜூனியர் விகடன் இணை ஆசிரியர் பிரிட்டோவை தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது” என்று நமக்கு விளக்கமளித்தார்.

மேலும், ஹெச்.ராஜாவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆராய்ந்தபோது இதுகுறித்து எந்த பதிவும் இடம்பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: Fact Check: உத்திரப் பிரதேசத்தில் சிறுமிக்கு இரத்தம் ஏற்ற படுக்கை, ஸ்டாண்ட் இல்லை பரவும் படத்தின் உண்மை பின்னணி!

Conclusion

அதிமுகவுடனான கூட்டணியை முறிக்க அண்ணாமலைக்கு யார் அதிகாரம் தந்தது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation With, I.Britto, Junior Vikatan, Dated March 19, 2023


உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்.

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular