திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024
திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

HomeFact CheckFact Check: அதானி மனைவியை தலைகுனிந்து வணங்கினாரா பிரதமர் மோடி?

Fact Check: அதானி மனைவியை தலைகுனிந்து வணங்கினாரா பிரதமர் மோடி?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim : அதானி மனைவியை தலைகுனிந்து வணங்கினார் பிரதமர் மோடி
Fact: பிரதமர் வணங்கிய நபர் தீபிகா மோந்தல் எனும் சமூக சேவகி ஆவார்

பிரதமர் மோடி அதானி நிறுவனங்களின் தலைவரான கௌதம் அதானியின் மனைவியை தலைகுனிந்து வணங்கியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பிரதமர் மோடி அதானி மனைவியை தலைகுனிந்து வணங்கியதாக வைரலாகும் தகவல்
Screengrab from Facebook/arumugasamy.arumugasamy.1293
பிரதமர் மோடி அதானியின் மனைவியை தலைகுனிந்து வணங்கியதாக வைரலாகும் தகவல்
Screengrab from Facebook/sheik.hussain.10
பிரதமர் மோடி அதானியின் மனைவியை தலைகுனிந்து வணங்கியதாக வைரலாகும் தகவல்
Screengrab from Facebook/manimozhigideon.nadar

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: FactCheck: சுவாமி விவேகானந்தரின் அரிதான வீடியோ என்று பரவும் வீடியோ உண்மையானதா?

Factcheck / Verification

பிரதமர் மோடி அதானி மனைவியை தலைகுனிந்து வணங்கியதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து, இதன் பின்னணியில் இருந்த உண்மையை அறிய அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வில் ஒன் இந்தியா வெளியிட்ட செய்தி ஒன்றில் வைரலாகும் படம் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.  ஒன் இந்தியா வெளியிட்ட செய்தியில் வைரலாகும் படத்தில் காணப்படும் பெண்மணியின் பெயர் தீபிகா மோந்தல் எனவும், அவர் Divya Jyoti Cultural Organization and Welfare Society எனும் தனியார் தலைமை அதிகாரி எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி அதானியின் மனைவியை தலைகுனிந்து வணங்கியதாக வைரலாகும் தகவல்
Screenshot of a report by OneIndia showing PM Modi bowing to Deepika Mondol

தொடர்ந்து, அரசு சாரா நிறுவனங்கள் குறித்த இணையத்தளத்தில் ஆய்வு செய்ததில் தீபிகா மோந்தல் பெயரும், அவரது பதவியும் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் அமர் உஜாலா எனும் இணையத்தளத்திலும் இதே செய்தி இடம்பெற்றிருப்பதை நம்மால் காண முடிந்தது.

பிரதமர் மோடி அதானியின் மனைவியை தலைகுனிந்து வணங்கியதாக வைரலாகும் தகவல்
Screenshot of a report by Amar Ujala showing PM Modi bowing to Deepika Mondol

அதானியின் மனைவி யார்?

வைரலாகும் படத்திலிருக்கும் பெண்மணி கௌதம் அதானியின் மனைவி இல்லை என்பது உறுதியாகிய பின், உண்மையில் அதானியின் மனைவி யார் என்பது குறித்து தேடினோம்.

இத்தேடலில் அவரது பெயர் பிரீத்தி அதானி என்று தெரிய வந்தது. இவர் அதானி குழுமத்தின் தலைவராக உள்ளார்.

Also Read: சிஎஸ்கே சிவம் துபே சிக்ஸரில் சிதறிய கண்ணாடி என்று 2022ஆம் ஆண்டு புகைப்படம் பகிர்ந்த News 18 தமிழ்நாடு!

Conclusion

பிரதமர் மோடி அதானி மனைவியை தலைகுனிந்து வணங்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from One India, Dated on April 9, 2018
Report from Amar Ujala, Dated on April 12, 2018

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular