திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkபிரதமர் மோடி ஆராய்ச்சியாளர் உடையில் மைக்ரோஸ்கோப்பில் பார்ப்பதாக பரவும் AI உருவாக்க புகைப்படம்!

பிரதமர் மோடி ஆராய்ச்சியாளர் உடையில் மைக்ரோஸ்கோப்பில் பார்ப்பதாக பரவும் AI உருவாக்க புகைப்படம்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பிரதமர் மோடி ஆராய்ச்சியாளர் உடையில் மைக்ரோஸ்கோப்புடன் இருக்கும் படம்
Fact: வைரலாகும் புகைப்படம் AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்

பிரதமர் மோடி ஆராய்ச்சி செய்பவர்கள் போல வெள்ளை கோர்ட் அணிந்து கொண்டு மைக்ரோஸ்கோப்பில் பார்ப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பிரதமர் மோடி ஆராய்ச்சியாளர் உடையில் மைக்ரோஸ்கோப்பில் பார்ப்பதாக பரவும் புகைப்படம்
Screengrab from Twitter@ArasiyalKadai
பிரதமர் மோடி ஆராய்ச்சியாளர் உடையில் மைக்ரோஸ்கோப்பில் பார்ப்பதாக பரவும் புகைப்படம்
Screengrab from Facebook/Faizal Faizal

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: Fact Check: அதானி மனைவியை தலைகுனிந்து வணங்கினாரா பிரதமர் மோடி?

Factcheck / Verification

பிரதமர் மோடி ஆராய்ச்சியாளர் உடையில் மைக்ரோஸ்கோப்பில் பார்ப்பதாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து, அப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது என்பது நமக்குத் தெரிய வந்தது.

சமூக வலைத்தளத்தில் Sahixd என்கிற பெயரில் இயங்கும் டிஜிட்டல் கலைஞர் ஷாகித் இந்த AI புகைப்படத்தை உருவாக்கியுள்ளார். Artificial intelligence envisions Narendra Modi in diverse professions through the creation of different images (பிரதமர் மோடி பல தரப்பட்ட தொழிலில் இருந்தால் எவ்வாறு இருக்கும்) என்னும் தலைப்பின் கீழ் பிரதமர் மோடியின் இப்புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

பிரதமர் மோடி ஆராய்ச்சியாளர் உடையில் மைக்ரோஸ்கோப்பில் பார்ப்பதாக பரவும் புகைப்படம்

இது தவிர்த்து  இக்கலைஞர் பிரதமர் மோடியின் பல படங்களை AI தொழில்நுட்பம் வழியாக உருவாக்கியுள்ளார். அவற்றில் ஒன்று ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, அப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட படம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் நிரூபித்து செய்தி வெளியிட்டுள்ளோம். அதை இங்கே காணலாம்.

Also Read: வாழும் காமராஜர் அண்ணாமலை என்று சிறுவன் ஒருவர் பதாகை பிடித்ததாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம்!

Conclusion

பிரதமர் மோடி ஆராய்ச்சியாளர் உடையில் மைக்ரோஸ்கோப்பில் பார்ப்பதாக பரவும் புகைப்படம் AI மூலமாக Sahid என்கிற டிஜிட்டல் கலைஞர் உருவாக்கியது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Image Uploaded by Instagram User Sahixd on April 02, 2023

(இந்த செய்தியானது நியூஸ்செக்கர் இந்தியில் பிரசுரமாகியுள்ளது)

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular