Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாரின் ஊழல் பற்றி பேசிய காங்கிரஸ் கட்சியினர்
Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.
கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாரின் சொத்துக்குவிப்பு ஊழல் பற்றி காங்கிரஸ் தலைவர் உக்ரப்பா மற்றும் KPCC ஊடக ஒருங்கிணைப்பாளர் சலீம் ஆகியோர் அணைக்காத மைக்கில் பேசுவதாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.
“ கர்நாடகா காங்கிரஸ் தலைவர் DK சிவகுமார் தன் கட்சிக்காரார்கள் ஊழலை பற்றி மைக் ஆஃப் செய்யாமல் பேசும் காணொளி வைரல். நாளை கர்நாடகா தேர்தல் முன்னிட்டு கடும் எதிர்ப்பலை காங்கிரஸுக்கு எதிராக உருவாகி உள்ளது… மீண்டும் கர்நாடகாவில் பாஜக தான்” என்று இந்த வீடியோ பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பாதுகாப்பு வழங்கியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டினாரா பிரதமர்?
Fact Check/Verification
கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாரின் சொத்துக்குவிப்பு ஊழல் பற்றி காங்கிரஸ் தலைவர் உக்ரப்பா மற்றும் சலீம் ஆகியோர் பேசுவதாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ஆராய்ந்தபோது கடந்த 2021ஆம் ஆண்டு இந்த வீடியோ வெளியாகியிருப்பதும், அதனை India today உள்ளிட்ட ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருப்பதும் தெரிய வந்தது.
மேலும், சலீம் மற்றும் உக்ரப்பாவின் இந்த உரையாடல் வைரலாகியதைத் தொடர்ந்து, அவர்கள் இருவருமே ஊடகம் ஒன்றிற்கு விளக்கமளித்திருந்தனர்.
எனினும், ஊடகத் தொடர்பாளர் சலீம் கட்சியிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு விலக்கி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து பேசியிருந்த டிகே சிவக்குமார், “இந்த வீடியோ பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நான் மீடியாவைக் குறை சொல்ல மாட்டேன். நாங்கள் என்ன பேசுகிறோமோ அதையே மக்களுக்கு காட்டுகிறீர்கள். அவர்கள் மீது ஒழுங்குமுறை கமிட்டி நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோவே தற்போது புதிய செய்தி போன்று பரவி வருகிறது.
Also Read: சச்சின் தெண்டுல்கர் சமையல் சிலிண்டர் விலையேற்றத்தை விமர்சிக்கும் விதமாக விறகடுப்பில் சமைத்தாரா?
Conclusion
கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமாரின் சொத்துக்குவிப்பு ஊழல் பற்றி காங்கிரஸ் தலைவர் உக்ரப்பா மற்றும் சலீம் ஆகியோர் பேசுவதாகப் பரவும் வீடியோ கடந்த 2021ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
YouTube Video, from India Today, Dated October 13, 2021
YouTube Video, from Republic World, Dated October 13, 2021
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.