திங்கட்கிழமை, ஜூலை 22, 2024
திங்கட்கிழமை, ஜூலை 22, 2024

HomeEntertainmentஜிபி முத்துவுக்கு சிருஷ்டி டாங்கே ஜோடியானதாக தவறான செய்தி வெளியிட்ட மாலைமலர்!

ஜிபி முத்துவுக்கு சிருஷ்டி டாங்கே ஜோடியானதாக தவறான செய்தி வெளியிட்ட மாலைமலர்!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ஜிபி முத்துவுக்கு ஜோடியானார் சிருஷ்டி டாங்கே
Fact: வைரலாகும் படம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்டதாகும்

சமூக ஊடகங்களின் மூலம் பிரபலமானவர் ஜிபி முத்து. இவர் தற்போது சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றார். இவர் நடிகை சிருஷ்டி டாங்கேவுக்கு ஜோடியானதாக மாலைமலர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. சிருஷ்டி டாங்கே மேகா, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகியாக நடித்தவராவார்.

ஜிபி முத்துவுக்கு சிருஷ்டி டாங்கே ஜோடியானதாக மாலைமலர் வெளியிட்ட செய்தி
Screenshot from Twitter@singai_pradeep

மாலை மலர் வெளியிட்ட இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பாதுகாப்பு வழங்கியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை பாராட்டினாரா பிரதமர்?

Fact Check/Verification

ஜிபி முத்துவுக்கு சிருஷ்டி டாங்கே ஜோடியானதாக மாலைமலர் செய்தி வெளியிட்டிருந்ததை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம். அந்த ஆய்வில் வைரலாகும் இத்தகவல் தவறானது என்பது தெரிய வந்துள்ளது.

சிருஷ்டி டாங்கே தனியார் தொலைக்காட்சி ஒன்றின் சமையல் நிகழ்ச்சி ஒன்றில் தற்போது பங்கேற்று வருகின்றார். இந்நிகழ்ச்சியில் ஜிபி முத்துவும் பங்கேற்று வருகின்றார். இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்தே இந்த தவறான தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.

.

சிருஷ்டி டாங்கே தவிர்த்து இந்நிகழ்ச்சியில் பங்குபெற்று வரும் ஆண்ட்ரின், மோனிஷா ஆகியோருடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஜிபி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருப்பதை நம்மால் காண முடிநது.

Also Read: தெர்மோகோலிலிருந்து போலி சர்க்கரை தயாரிக்கப்படுவதாக பரவும் வதந்தி!

Conclusion

ஜிபி முத்துவுக்கு சிருஷ்டி டாங்கே ஜோடியானதாக மாலைமலர் வெளியிட்ட செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Facebook post from GP Muthu, Dated May 05, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular