வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact CheckReligionஇந்துவாக நடித்து இந்து பெண்ணுடன் பழகிய முஸ்லீம் ஆணை அப்பெண்ணின் உறவினர்கள் அடித்ததாக பரவும் தவறான...

இந்துவாக நடித்து இந்து பெண்ணுடன் பழகிய முஸ்லீம் ஆணை அப்பெண்ணின் உறவினர்கள் அடித்ததாக பரவும் தவறான வீடியோ!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: இந்துவாக நடித்து இந்து பெண்ணுடன் பழகிய முஸ்லீம் ஆணை அப்பெண்ணின் உறவினர்கள் அடித்து துவைத்தனர்.

Fact: இது சிறுமிக்கு பாலியல் சீண்டல் கொடுத்த நபரை தாக்கும் வீடியோவாகும். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இருவரும் ஒரே இனத்தை சார்ந்தவர்களாவர்.

“முஸ்லீம் பையன் தன்னை இந்துவாக காட்டி இந்து பெண்ணுடன் பழக ஆரம்பித்தான், அது லவ் ஜிகாத் என்பதை அந்த பெண்ணின் ஆட்கள் உணர்ந்தனர், பிறகு நடந்ததை இந்த வீடியோவில் பாருங்கள்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

 இந்துவாக நடித்து இந்து பெண்ணுடன் பழகிய முஸ்லீம் ஆணை அப்பெண்ணின் உறவினர்கள் அடித்ததாக பரவும் வீடியோத் தகவல்
Screengrab from Twitter@NaMo_Bharathan

Twitter Link | Archived Link

 இந்துவாக நடித்து இந்து பெண்ணுடன் பழகிய முஸ்லீம் ஆணை அப்பெண்ணின் உறவினர்கள் அடித்ததாக பரவும் வீடியோத் தகவல்
Screengrab from Twitter@SenthilpandianK

Archived Link

 இந்துவாக நடித்து இந்து பெண்ணுடன் பழகிய முஸ்லீம் ஆணை அப்பெண்ணின் உறவினர்கள் அடித்ததாக பரவும் வீடியோத் தகவல்
Screengrab from Twitter@TamilNambi8

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு இருக்கை தராமல் அவமதிமதித்தாரா எடப்பாடி பழனிசாமி?

Fact Check/Verification

இந்துவாக நடித்து இந்து பெண்ணுடன் பழகிய முஸ்லீம் ஆணை அப்பெண்ணின் உறவினர்கள் அடித்ததாக கூறி வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அவ்வீடியோவை ஒவ்வொரு புகைப்படமாக பிரித்து கூகுள் லென்ஸை பயன்படுத்தி அவ்வீடியோ குறித்து ஆராய்ந்தோம்.

இத்தேடலில் ஜனவரி 20, 2020 அன்று “Eve-teaser paraded naked, thrashed by women in Ambala City” என்று தலைப்பிட்டு வைரலாகும் வீடியோ குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

அச்செய்தியில் வீடியோவில் காணப்படும் சம்பவம் ஹரியானா மாநிலத்தின் அம்பாலா பகுதியில் 2020 ஆம் ஆண்டில் நிகழ்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் வீடியோவில் அடி வாங்கும் நபர் இஸ்லாமியர் அல்ல; இந்து மதத்தை சார்ந்தவர், அவர் பெயர் பவண் எனவும் அறிய முடிகின்றது. 18 வயதுக்கு உட்பட்ட 3 சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்ததால் இந்நபரை அச்சிறுமிகளின் உறவினர்கள் தாக்கியுள்ளனர். இவனை அம்பாலா போலீசார் போசோ சட்டத்தின் கீழ் அச்சமயத்தில் கைது செய்துள்ளனர்.

 இந்துவாக நடித்து இந்து பெண்ணுடன் பழகிய முஸ்லீம் ஆணை அப்பெண்ணின் உறவினர்கள் அடித்ததாக பரவும் வீடியோத் தகவல்
Screengrab from TOI

இதனையடுத்து தேடியதில், வைரலாகும் இவ்வீடியோவானது ‘லவ் ஜிகாத்’ என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளத்தளங்களில் தற்சமயம் வைரலானதை தொடர்ந்து மீரட் போலீஸார் இவ்வீடியோ குறித்து விளக்கம் தெரிவித்து டிவீட் செய்துள்ளதை நம்மால் காண முடிந்தது.

அந்த டிவீட்டில், “இச்சம்பமானது 2020-ல் அம்பாலாவில் நடந்ததாகும். இவ்வழக்கில் தொடர்புடைய இரு சாராரும் ஒரே இனத்தை சார்ந்தவர்களாவர். இந்த வீடியோ குறித்து தவறான கருத்துகளை பரப்புபவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கிடைத்த ஆதாரங்களின்படி நமக்கு தெளிவாகுவது என்னவென்றால்,

  1. வைரலாகும் வீடியோவில் கூறப்படும் லவ் ஜிகாத் எனும் தகவல் தவறானதாகும். சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்ததால் அந்நபர் தாக்கப்பட்டுள்ளார். அவர் இந்து மதத்தை சார்ந்தவர்; முஸ்லீம் அல்ல.
  2. வைரலாகும் வீடியோவில் காணப்படும் இரு சாராரும் ஒரே இனத்தைச் சார்ந்தவர்களாவர்.
  3. வைரலாகும் வீடியோவானது 2020-ல் வெளிவந்த பழைய வீடியோவாகும்.

Also Read: மாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் என்றாரா ஈ.பி.எஸ்?

Conclusion

இந்துவாக நடித்து இந்து பெண்ணுடன் பழகிய முஸ்லீம் ஆணை அப்பெண்ணின் உறவினர்கள் அடித்ததாக பரவும் வீடியோத் தகவல் முற்றிலும் பொய்யானது என்பதுநமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Tweet from Meerut Police, Dated Feb 08, 2023

Report from Times of India, Dated Jan 20, 2020

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular