திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024
திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

HomeFact Checkஇந்து மதத்தை கற்பிக்க தடை விதிக்கும் சட்டப்பிரிவு 30A அழிக்கப்படவிருப்பதாக பரவும் வதந்தி!

இந்து மதத்தை கற்பிக்க தடை விதிக்கும் சட்டப்பிரிவு 30A அழிக்கப்படவிருப்பதாக பரவும் வதந்தி!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: இந்து மதத்தை கற்பிக்க தடை விதிக்கும் சட்டப்பிரிவு 30A அழிக்கப்பட உள்ளது.

Fact: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 30A  என்ற சட்டப் பிரிவே கிடையாது.

மோடியின் இரண்டாவது அடி வருகிறது…!
சட்டம் 30-A ஒழிக்கப்படலாம்…!
நேரு இந்துக்களுக்கு செய்த துரோகத்தை சரி செய்ய மோடி ஜி முற்றிலும் தயாராக இருக்கிறார்!
“சட்டம் 30” மற்றும் “30A” பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
“30A” சட்ட பிரிவு என்றால் என்ன தெரியுமா?
மேலும் அறிய படியுங்கள்…
“30-A” என்பது அரசியலமைப்பில் உள்ள ஒரு சட்டம். நேரு இந்த சட்டத்தை அரசியல் சட்டத்தில் சேர்க்க முயன்றபோது, சர்தார் வல்லபாய் படேல் கடுமையாக எதிர்த்தார். “இந்த சட்டம் இந்துக்களுக்கு செய்யும் துரோகம்” எனவே இந்த சட்டம் அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்டால், நான் அமைச்சரவை மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவேன் என்றார் படேல்.
இறுதியில், சர்தார் படேலின் விருப்பத்திற்கு நேரு தலைவணங்க வேண்டியதாயிற்று. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த சம்பவம் நடந்த சில மாதங்களில் சர்தார் வல்லபாய் படேல் திடீரென மரணமடைந்தார்.
சர்தார் படேல் இறந்த பிறகு நேரு உடனடியாக இந்த சட்டத்தை அரசியல் சட்டத்தில் சேர்த்தார்.
30-A என்றால் என்ன?
அதன் அம்சங்களைச் சொல்கிறேன்.
இந்தச் சட்டத்தின் படி, இந்துக்கள் தங்கள் “இந்து மதத்தை” கற்க/கற்பிக்க அனுமதி இல்லை. “சட்டம் 30-A” அனுமதிக்கவோ அதிகாரம் அளிக்கவோ இல்லை. தனியார் கல்வி நிலையங்களில் இந்து மதத்தைப் போதிக்கக் கூடாது. இந்து மதத்தை கற்க/கற்பிக்க கல்லூரிகள் தொடங்கக்கூடாது.
இந்து மதத்தை போதிக்க இந்து பள்ளிகளை தொடங்கக்கூடாது. சட்டம் 30A -ன் கீழ் பொதுப் பள்ளிகளிலோ அல்லது கல்லூரிகளிலோ இந்து மதப் பண்பாட்டைக் கற்பிக்க யாருக்கும் அனுமதி இல்லை. இது விசித்திரமாகத் தெரிகிறது.
நேரு தனது அரசியலமைப்பில்  சட்டம் 30-இல் மற்றொரு சட்டத்தை உருவாக்கினார். இந்த சட்டம் 30-இன் படி முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தங்கள் மதக் கல்விக்காக இஸ்லாமிய, சீக்கிய, கிறிஸ்தவ மதப் பள்ளிகளைத் தொடங்கலாம். முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தை கற்பிக்கலாம். சட்டம் 30 இஸ்லாமியர்கள் தங்கள் சொந்த ‘மதராசா’ தொடங்க முழு உரிமை மற்றும் அனுமதி வழங்குகிறது மற்றும் அரசியலமைப்பின் 30ன்படி கிறிஸ்தவர் தங்கள் சொந்த மத பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை நிறுவ மற்றும் கற்பிக்க முழு உரிமை மற்றும் அனுமதி வழங்குகிறது.
இதன் மற்றுமொரு சட்ட அம்சம் என்னவென்றால், இந்துக் கோவில்களின் பணம் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் அரசின் விருப்பத்திற்கே விட்டுவிடலாம். இந்துக் கோவில்களுக்கு இந்து பக்தர்கள் வழங்கும் காணிக்கை மற்றும் பிற நன்கொடைகள் அனைத்தும் அரசின் கருவூலத்திற்குச் செல்லும். அதே சமயம், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மசூதிகளில் இருந்து வரும் நன்கொடை மற்றும் அன்னதானம், கிறிஸ்தவ-முஸ்லிம் சமூகத்தினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
எனவே “சட்டம் 30-A” மற்றும் “சட்டம் 30” என்பது இந்துக்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் வேண்டுமென்றே திட்டமிட்ட மாபெரும் துரோகமாகும். இன்று இந்து என்பது நாட்டுப்புறக் கதைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அனைவரும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்துக்களுக்கு அவர்களின் வேதங்களைப் பற்றிய அறிவு இல்லை. எனவே நாம் அனைவரும் சனாதன தர்மத்தை காப்போம்.
படியுங்கள், கற்றுக் கொள்ளுங்கள், பரப்புங்கள்.
இதற்குக் காரணம் “பிரிவு 30-A”.
நமது நாட்டில் எங்கும் *பகவத் கீதை* கற்பிக்க முடியாது.
நேரு எதற்காக இதைச் செய்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

என்று குறிப்பிட்டு தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்து மதத்தை கற்பிக்க தடை விதிக்கும் சட்டப்பிரிவு 30A அழிக்கப்படவிருப்பதாக பரவும் தகவல்
Screengrab from Twitter@GOVINDTNINDIA

Twitter Link | Archived Link

இந்து மதத்தை கற்பிக்க தடை விதிக்கும் சட்டப்பிரிவு 30A அழிக்கப்படவிருப்பதாக பரவும் தகவல்
Screengrab from Facebook/ravi.govindasami.3

Facebook Link

இந்து மதத்தை கற்பிக்க தடை விதிக்கும் சட்டப்பிரிவு 30A அழிக்கப்படவிருப்பதாக பரவும் தகவல்
Screengrab from Facebook/srinivasan.vasan.1441

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு இருக்கை தராமல் அவமதிமதித்தாரா எடப்பாடி பழனிசாமி?

Fact Check/Verification

இந்து மதத்தை கற்பிக்க தடை விதிக்கும் சட்டப்பிரிவு 30A அழிக்கப்படவிருப்பதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

முன்னதாக அரசியலைப்பு சட்டத்தில் 30A என சட்டப்பிரிவு உள்ளதா, அது இந்து மதத்தை போதிக்க தடை விதித்துள்ளதா என அறிய இந்திய அரசின் சட்டத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தரப்பட்டிருந்த அரசியலமைப்பு சட்டத்தில் தேடினோம். இத்தேடலில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 30A  என்ற சட்டப் பிரிவே கிடையாது என அறிய முடிந்தது.

இந்திய அரசியலமைப்பு சட்டதில் பிரிவு 30, 30(1), 30(1)(A), 30 (2) ஆகிய பிரிவுகள் மட்டுமே உள்ளது.

இச்சட்டங்களில் கூறப்பட்டவைகளாவன:

இந்து மதத்தை கற்பிக்க தடை விதிக்கும் சட்டப்பிரிவு 30A அழிக்கப்படவிருப்பதாக பரவும் தகவல்
Screengrab of Article 30 from Indian Constitution

இதனடிப்படையில் பார்க்கையில் மதம் மற்றும் மொழி அடிப்படையில் சிறுபான்மையினராக இருக்கக்கூடியவர்கள் கல்வி நிறுவனங்கள் நடத்தினால், அவர்களுக்குரிய உரிமைகளை பற்றி சட்டப்பிரிவு 30-ம் அதன் உட்பிரிவும் தெரிவிக்கின்றது. இதை தவிர்த்து இந்து மதத்திற்கு எதிராக எந்த வித தடையும் இதில் கூறப்படவில்லை.

இந்தியாவின் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்துக்களின் மக்கள்தொகை குறைவாக இருப்பதாகவும், அப்பகுதிகளில் இந்துக்களுக்கு சிறுபான்மை தகுதி தர வேண்டும் என்று வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இந்த வழக்கில் இந்துக்களுக்கு தீர்ப்பு சாதகமாக வரும்பட்சத்தில் அப்பகுதிகளில் வாழும் இந்துக்களுக்கும் சட்டப்பிரிவு 30-ல் கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் கிடைக்கும்.

ஆகவே எந்த ஒரு தனிப்பட்ட மதத்தினருக்கோ, மொழியினருக்கோ சலுகை தருவதற்காக இந்த சட்டங்கள் இயற்றப்படவில்லை.

கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பார்க்கையில் சட்டபிரிவு 30A என்பதும், அதை சார்ந்து கூறப்படும் நேரு-பட்டேல் கதையும் வடிகட்டிய சுத்தமான பொய் கட்டுக்கதை என அறிய முடிந்தது.  

Also Read: மாமன்னன் படக்குழுவினர் மீது அவதூறு வழக்கு தொடுப்பேன் என்றாரா ஈ.பி.எஸ்?

Conclusion

இந்து மதத்தை கற்பிக்க தடை விதிக்கும் சட்டப்பிரிவு 30A அழிக்கப்படவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் முற்றிலும் பொய்யான ஒன்று என்பதும், உண்மையில் அவ்வாறு ஒரு சட்டப்பிரிவே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கிடையாது என்பதும் நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Indian Constitution


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Most Popular