Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: ஆழ்ந்த இரங்கல் பதிவிற்கு தடை கோரி பாஜக தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
“ஆழ்ந்த இரங்கல்-க்கு தடை கோரி மனு. பாஜக தலைவர் அண்ணாமலையின் பாத யாத்திரை தொடர்பான செய்திகளில் “ஆழ்ந்த இரங்கல்” என கமெண்ட் எழுத தடை செய்ய கோரி உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் பாஜக அறிவுசார் அணியின் சார்பில் மனு” என்று இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: உத்தரகாண்ட் குறித்து மதவாத பிரச்சாரம் செய்த இந்து சாமியார் விபச்சார அழகிகளுடன் பிடிபட்டாரா?
Fact Check/Verification
ஆழ்ந்த இரங்கல் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்த செய்திகளின் கீழ் கமெண்ட் பதிவிட தடை கோரி பாஜக நீதிமன்றத்தை நாடியுள்ளதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலில் வைரலாகும் ஆழ்ந்த இரங்கல் என்னும் கமெண்ட் குறித்து ஆராய்ந்தபோது பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்த செய்திகளின் கீழே சமூக வலைத்தளங்களில் பலரும் ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ட்விட்டரிலும் ஆழ்ந்த இரங்கல் என்கிற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து, தந்தி டிவி பெயரில் குறிப்பிட்ட நியூஸ்கார்ட் வைரலாகும் நிலையில் அவர்களுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் கமெண்டிற்கு தடை கோரி பாஜக அறிவு சார் பிரிவினர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளதா என்று ஆராய்ந்தோம்.
அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் “பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதவர் கோயிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு” என்று நியூஸ்கார்ட் ஒன்று வெளியாகியிருந்தது.
குறிப்பிட்ட நியூஸ்கார்டை எடுத்தே வைரல் நியூஸ்கார்டினை எடிட் செய்து உருவாக்கியுள்ளனர் என்பது தெளிவாகியது.
மேலும், வைரல் நியூஸ்கார்ட் குறித்து தந்தி டிவியின் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் வினோத்திடம் தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்து பரவுகிறது” என்று விளக்கமளித்தார்.
Also Read: ‘நரக பேருந்து நிலையம்’ என்று எழுத்துப்பிழையுடன் முகப்புப் பலகை வைத்ததா கோவை மாநகராட்சி?
Conclusion
ஆழ்ந்த இரங்கல் என்று பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை குறித்த செய்திகளின் கீழ் கமெண்ட் பதிவிட தடை கோரி பாஜக நீதிமன்றத்தை நாடியுள்ளதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Image
Our Sources
Facebook Post From, Thanthi TV, Dated July 31, 2023
Phone Conversation With, Vinoth, Thanthi TV Digital, Dated August 01, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.