Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim: சீமான் அவரது மனைவிக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு நடந்தது என்றார்.
Fact: வைரலாகும் தகவல் தவறானது. தந்தி தொலைக்காட்சியும், நாதக தரப்பும் இதை தெளிவு செய்துள்ளது.
நடிகை விஜயலட்சுமி கடந்த திங்கட்கிழமை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருமணம் செய்து ஏமாற்றியதாக புகார் ஒன்றை அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் சீமான் குறித்து பல்வேறு புகார்களை தெரிவித்தார். அதில் சீமான் 7 முறை கருக்கலைப்பு செய்ய வைத்தார் என்பதும் ஒன்றாகும்.
இந்நிலையில், என் மனைவிக்கே செயற்கை முறையில் தான் கருத்தரிப்பு நடந்திருக்கிறது. இப்படியிருக்க என்னால் 7 முறை கருக்கலைப்பு செய்ததாகச் சொல்வதைக் கேட்டால் உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீமான் கேள்வியெழுப்பியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழ்நாட்டின் குண்டும் குழியுமான சாலையில் விண் உடையில் ஒருவர் ‘மூன் வாக்’ சென்றாரா?
Fact Check/Verification
சீமான் அவரது மனைவிக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு நடந்தது என்று கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
அதில் வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஆகஸ்ட் 29, 2023 என்கிற தேதியில் சீமான் குறித்து எந்த ஒரு நியூஸ்கார்டையும் அந்நிறுவனம் வெளியிட்டிருக்கவில்லை.
ஆனால் அத்தேதியில் சீமான் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்று நடந்திருந்ததை நம்மால் அறிய முடிந்தது. அச்சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படமே வைரலாகும் கார்டில் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த சந்திப்பானது தந்தி தொலைக்காட்சியின் யூடியூப் பக்கத்தில் நேரலையாக பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதை நம்மால் காண முடிந்தது.
இச்சந்திப்பில் விஜயலட்சுமி குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அக்கேள்விக்கு, “அமைதியாக இதை கடந்து போக வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு மனைவி, 2 குழந்தைகள். எனக்கு குடும்பம் இருக்கு, சொந்தங்கள் இருக்கு. மீண்டும் இதைப்பற்றி திரும்ப திரும்ப பேசிக்கொண்டிருப்பது மிகவும் கேவலமாக இருக்கு” என்று சீமான் பதிலளித்திருப்பதை காண முடிந்தது.
இதுத்தவிர்த்து தன் மனைவிக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு நடந்ததாக எந்த ஒரு தகவலையும் சீமான் தெரிவித்திருக்கவில்லை.
இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையை சார்ந்த வினோத்குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர், வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.
இதனையடுத்து நாதகவின் செய்தி தொடர்பாளர் பாக்கியராசனைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் “இத்தகவல் முற்றிலும் பொய்யானது” என்று உறுதி செய்தார்.
Also Read: ரெனால்ட்ஸ் 045 Fine Carbure பேனா தயாரிப்பு நிறுத்தம் என்று பரவிய தகவல் உண்மையா?
Conclusion
சீமான் அவரது மனைவிக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு நடந்தது என்று கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Seeman Press Meet, Uploaded by Thanthi TV
Phone Conversation with Vinothkumar, Thanthi TV
Phone Conversation with Pakkiyarasan, Spokesperson, NTK
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.