திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Check2000 உண்மையான இந்துக்களுக்கு நிவாரணம்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

2000 உண்மையான இந்துக்களுக்கு நிவாரணம்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

2000 உண்மையான இந்துக்களுக்கு வெள்ள நிவாரணம் என பாஜக இளைஞரணி அறிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

2000 உண்மையான இந்துக்களுக்கு வெள்ள நிவாரணம் என பாஜக இளைஞரணி அறிவித்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மாநிலமே வெள்ளக் காடாக திகழ்கின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், பொது மக்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக இளைஞரணி சார்பில் 2000 உண்மையான இந்துக்களுக்கு வெள்ள நிவாரண உதவிகள் என தமிழ்நாடு பாஜக இளைஞரணி அறிவித்ததாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

2000 உண்மையான இந்துக்களுக்கு வெள்ள நிவாரணம் என பாஜக இளைஞரணி அறிவித்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 1

Facebook Link

2000 உண்மையான இந்துக்களுக்கு வெள்ள நிவாரணம் என பாஜக இளைஞரணி அறிவித்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 2

Facebook Link

2000 உண்மையான இந்துக்களுக்கு வெள்ள நிவாரணம் என பாஜக இளைஞரணி அறிவித்ததாக வைரலாகும் நியூஸ்கார்ட் - 3

Facebook Link

Also Read: வீட்டிற்குள் மழைநீர் வராமலிருக்க வீட்டின் கேட்களை மூடி வையுங்கள் என்றாரா முதல்வர் ஸ்டாலின்?

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Fact check/ Verification

2000 உண்மையான இந்துக்களுக்கு வெள்ள நிவாரணம் என தமிழ்நாடு பாஜக இளைஞரணி அறிவித்ததாக வைரலாகும் நியூஸ்கார்டின் உண்மைத்தன்மை குறித்து அறிய, வைரலாகும் நியூஸ்கார்டை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.

இந்த ஆய்வில் வைரலாகும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்ட போலியான ஒன்று என்பது தெளிவாகியது. சென்னை துறைமுக தொகுதியில் பாஜக இளைஞரணி சார்பில் கடந்த செவ்வாயன்று 2000 பேருக்கு வெள்ள நிவாரண உதவிகள் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுக்குறித்து தமிழ்நாடு பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் நியூஸ்கார்ட் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

Archive Link

இந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே வைரலாகும் மேற்கண்ட நியூஸ்கார்ட் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

வினோஜ் பி செல்வம் அவர்களும் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Archive Link

Also Read: ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்து காட்சி வைக்க சொன்னது திமுகதான்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?

Conclusion

2000 உண்மையான இந்துக்களுக்கு வெள்ள நிவாரணம் என பாஜக இளைஞரணி அறிவித்ததாக சமூக வலைத்தளங்களில்  வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது எனபதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources

Vinoj P Selvam Tweets


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular