திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024
திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024

HomeFact Checkதமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை தர முடியாது பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறினாரா?

தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை தர முடியாது பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறினாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை தர முடியாது என்றார் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்

Fact: இத்தகவல் தவறானது என்று பாஜக தரப்பும், தந்தி தொலைக்காட்சி தரப்பும் தெளிவு செய்துள்ளது.

டெல்லி சென்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் வெள்ள சேதங்களை தற்காலிகமாக சரிசெய்ய ₹7033 கோடியும், நிரந்தரமாக சரி செய்ய ₹12659 கோடியும் தேவை என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் மத்திய அரசு தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை தர முடியாது என்று தமிழக பாஜகவின் மாநிலத் துணைத்தலைவரும் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை தர முடியாது என்று நயினார் நாகேந்திரன் கூறியதாக பரவும் தகவல்

Twitter Link | Archived Link

தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை தர முடியாது என்று நயினார் நாகேந்திரன் கூறியதாக பரவும் தகவல்

Archived Link

தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை தர முடியாது என்று நயினார் நாகேந்திரன் கூறியதாக பரவும் தகவல்

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அயோத்தி ராமர் கோவில் என்று பரவும் தவறான வீடியோ!

Fact Check/Verification

தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை தர முடியாது என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.

முன்னதாக  தமிழக பாஜகவின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் இத்தகவல் முற்றிலும் பொய்யானது“ என்று பதிலளித்தார்.

இதையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் தந்தி தொலைக்காட்சி இவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது.

இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையை சார்ந்த வினோத்குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.

Also Read: அயோத்தி ராமர் கோயில் கட்டுமான குழுவினருடன் உணவருந்தும் பிரதமர் மோடி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Conclusion

தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை தர முடியாது என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with S.G.Suryah, State Secretary, Tamilnadu BJP
Phone Conversation with Vinothkumar, Thanthi TV

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular