Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Claim: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றார் பிரசாந்த் கிஷோர்.
Fact: வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று தந்தி தொலைக்காட்சி தரப்பு தெளிவு செய்துள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் எனவும் 200 இடங்களைத் தாண்டுவதே சிக்கலாக இருக்கும் எனவும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார். 2019ல் வென்ற பீகார், மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெரும் பின்னடைவை சந்திக்கும் எனவும் அவரது IPAC நிறுவனம் எடுத்த சர்வேயில் தெரிய வந்துள்ளது” என்று குறிப்பிட்டுநியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அயோத்தி ராமரைப் பார்த்து கண்ணீர் விட்ட புகைப்படக் கலைஞர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check/Verification
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து, பிரசாந்த் கிஷோர் இவ்வாறு கூறினாரா என தேடினோம்.
இத்தேடலில் பாஜக தலைமை ஏற்கும் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றி பெறும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
இந்தியா டுடேவின் யூடியூப் பக்கத்தில் இந்த பேட்டி இடம்பெற்றிருப்பதையும் காண முடிந்தது. மேலும் இப்பேட்டியில் நிதிஷ்குமார் குறித்தும், பீகார் அரசியல் குறித்தும் விவாதிக்கப்பட்டிருப்பதை காண முடிந்தது. இதுதவிர்த்து மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் குறித்து எதுவும் விவாதிக்கப்பட்டிருக்கவில்லை.
இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் மேற்கண்ட தகவல் தவறானது என்பது தெளிவாகின்றது. இதையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் தந்தி தொலைக்காட்சி இவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது.
இதனையடுத்து தந்தி தொலைக்காட்சியின் டிஜிட்டல் துறையை சார்ந்த வினோத்குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை தந்தி தொலைக்காட்சி வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.
Also Read: நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் கவலையில்லை என்றாரா துரைமுருகன்?
Conclusion
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Report from India Today, Dated Jan 29, 2024
Youtube Video from India Today, Dated Jan 29, 2024
Phone Conversation with Vinothkumar, Thanthi TV
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.