Authors
Claim: கர்நாடகாவில் ரதம் செல்லும் வழியில் ஒரு முஸ்லீம் காரை நிறுத்தி, நான் எடுக்க மாட்டேன் என்று கூற, நீண்ட நேரம் காத்திருந்த இந்துக்கள் கடைசியில் காரை தூக்கி குறுக்கே எறிந்தனர்.
Fact: வைரலாகும் நிகழ்வில் சேதமடைந்த வாகனங்கள் இஸ்லாமியர்களுடையது அல்ல.
கர்நாடகாவில் ரதம் செல்லும் வழியில் காரை நிறுத்திய இஸ்லாமியர் என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“கர்நாடகாவில் ரதம் செல்லும் வழியில் ஒரு முஸ்லீம் காரை நிறுத்தி, நான் எடுக்க மாட்டேன் என்று கூற, நீண்ட நேரம் காத்திருந்த இந்துக்கள் கடைசியில் காரை தூக்கி குறுக்கே எறிந்தனர்.” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
கர்நாடகாவில் ரதம் செல்லும் வழியில் காரை நிறுத்திய இஸ்லாமியர் என்று பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய கீ-வேர்ட்கள் மூலமாக தேடுதலில் ஈடுபட்டோம். அதன்முடிவில், கடந்த ஏப்ரல் 04, 2024 அன்று Daijiworld வெளியிட்டிருந்த செய்தி நமக்குக் கிடைத்தது.
அதன்படி, பாபநாடு துர்காபரமேஸ்வரி கோயில் திருவிழாவில் கடைகள் அமைத்திருந்த வாகனங்களை ரதம் செல்லும் வழிக்காக மக்கள் ஒதுக்கிய நிலையில் அவற்றில் சில சேதமடைந்துள்ளன.
அதே போன்று, மங்களூரு மிரரும் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், இந்த செய்திகள் அவ்வாகனங்கள் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என்று இடம்பெற்றிருக்கவில்லை.
தொடர்ந்து, வைரல் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் காரின் நம்பர் ப்ளேட் எண் மூலமாகத் தேடியபோது அந்த காரும் இஸ்லாமியருக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது நமக்கு தெரியவந்தது.
முல்கி காவல்துறையிடம் இதுகுறித்து பேசியபோது, “ரத ஊர்வலத்திற்காக வாகனங்கள் நகர்த்தப்பட்டபோது சேதமடைந்தன. அவை திருவிழாவில் கடை அமைக்க வந்திருந்தவர்களின் வாகனங்கள்; இஸ்லாமியர்களுடைய அல்ல” என்று விளக்கமளித்தனர்.
Also Read: அண்ணாமலையை கெடா மாடு என்றாரா வானதி சீனிவாசன்?
Conclusion
கர்நாடகாவில் ரதம் செல்லும் வழியில் காரை நிறுத்திய இஸ்லாமியர் என்று பரவும் தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Report By Daijiworld, Dated: April 4, 2024
Report By Themangaloremirror.in, Dated: April 4, 2024
Website of RTO Vehicle Information
Conversation with Mulki police station, Mulki
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)