வெள்ளிக்கிழமை, மே 3, 2024
வெள்ளிக்கிழமை, மே 3, 2024

HomeFact Checkவயநாட்டில் பாகிஸ்தான் கொடியை அசைத்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதா?

வயநாட்டில் பாகிஸ்தான் கொடியை அசைத்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: வயநாட்டில் பாகிஸ்தான் கொடியை அசைத்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

Fact: வைரலாகும் வீடியோ 2019 ஆண்டின் பழைய வீடியோவாகும். அவ்வீடியோவில் காணப்படும் சம்பவம் வயநாட்டில் நடந்ததல்ல; காசர்கோடில் நடந்ததாகும். அதேபோல் அக்கூட்டத்தில் பயன்படுத்தப்பட்டது பாகிஸ்தான் கொடியல்ல; இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொடியாகும்.

“வயநாட்டில் காங்கிரஸ் ராகுல் காந்தியை ஆதரித்து பாகிஸ்தான் கொடியை அசைத்து ஆதரவு தெரிவிக்கிறார்கள்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

வயநாட்டில் பாகிஸ்தான் கொடியை அசைத்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதாக பரவும் தகவல்

X Link | Archive Link

வயநாட்டில் பாகிஸ்தான் கொடியை அசைத்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதாக பரவும் தகவல்

Archive Link

வயநாட்டில் பாகிஸ்தான் கொடியை அசைத்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதாக பரவும் தகவல்

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: திமுக பொது செயலாளர் துரைமுருகன் உதவியாளர் வீட்டில் கட்டுகட்டாக பணம் என்று பரவும் 2019ஆம் ஆண்டு வீடியோ!

Fact Check/Verification

வயநாட்டில் பாகிஸ்தான் கொடியை அசைத்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதாக பரப்பப்படும் வீடியோவை கூர்ந்து கவனிக்கையில், அவ்வீடியோவில் காணப்படும் கொடி பாகிஸ்தான் கொடியல்ல, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொடி என அறிய முடிந்தது.

பாகிஸ்தான் கொடியில் முக்கால் பங்கு பச்சை நிறமும் கால் பங்கு வெள்ளை நிறமும் இருக்கும். பச்சை நிற பகுதியில் வெள்ளை நிறத்தில் மூன்றாம் பிறையும் நட்சத்திரமும் வலது புறம் பார்த்தவாறு இருக்கும்.

வயநாட்டில் பாகிஸ்தான் கொடியை அசைத்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதாக பரவும் தகவல்

ஆனால் வைரலாகும் வீடியோவில் காணப்படும் கொடியானது முழுவதுமாக பச்சை நிறத்தில் இருந்தது. மேலும் அக்கொடியில் மூன்றாம் பிறையும் நட்சத்திரமும் இடது புறத்தை பார்த்தவாறு இருந்தது.

வயநாட்டில் பாகிஸ்தான் கொடியை அசைத்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதாக பரவும் தகவல்
Screengrab from Viral video

அக்கொடி எந்த கொடி என்று தேடுகையில் அது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொடி என அறிய முடிந்தது.

வயநாட்டில் பாகிஸ்தான் கொடியை அசைத்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதாக பரவும் தகவல்

வாசகர்களின் புரிதலுக்காக பாகிஸ்தான் கொடியையும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொடியையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

வயநாட்டில் பாகிஸ்தான் கொடியை அசைத்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதாக பரவும் தகவல்

இதனையடுத்து வைரலாகும் வீடியோவை தனித்தனி கீஃபிரேம்களாக பிரித்து, வைரலாகும் வீடியோ குறித்து தேடினோம். இத்தேடலில் வைரலாகும் வீடியோ 2019 ஆண்டிலிருந்தே பரவி வருவதை காண முடிந்தது.

வயநாட்டில் பாகிஸ்தான் கொடியை அசைத்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதாக பரவும் தகவல்

மேலும் வைரலாகும் வீடியோவில், “இம்முறை சிபிஎம்-ஐ சேர்ந்த சதீஷ் சந்திரன் வீட்டில் இருக்கட்டும், பாராளுமன்றத்திற்கு உன்னித்தான் வென்று போகட்டும், UDF கூட்டணி ஜிந்தாபாத்” என்கிற கோஷங்கள் ஒலிக்கப்படுவதை கேட்க முடிந்தது.

இதை அடிப்படையாக வைத்து தேடியதில் காசர்கோடு தொகுதியில் 2019 ஆம் ஆண்டு ராஜ்மோகன் உன்னித்தான் என்பவர் சிபிஐம்-ஐ சேர்ந்த சதீஷ் சந்திரன் என்பவரை தோற்கடித்து வென்றி பெற்றதாக ஃபர்ஸ்போஸ்ட் இணையத்தள ஊடகச் செய்தியின் வாயிலாக அறிய முடிந்தது.

வயநாட்டில் பாகிஸ்தான் கொடியை அசைத்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதாக பரவும் தகவல்
Screengrab from Firstpost

மேலும் வைரலாகும் வீடியோவில் “அரமணா சில்க்ஸ்” எனும் கடையின் பெயர்பலகை இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

வயநாட்டில் பாகிஸ்தான் கொடியை அசைத்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதாக பரவும் தகவல்

இக்கடை குறித்து கூகுள் மேப்பை பயன்படுத்தி தேடுகையில் இக்கடையானது காசர்கோடு பகுதியில் உள்ளது என அறிய முடிந்தது. அதேபோல் வைரலாகும் வீடியோவில் காணப்படும் மற்ற கடைகள், மரம் உள்ளிட்டவை இக்கடையை சுற்றி இருப்பதை காண முடிந்தது.

வயநாட்டில் பாகிஸ்தான் கொடியை அசைத்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதாக பரவும் தகவல்
(L-R) Google image and screengrabs from viral video
வயநாட்டில் பாகிஸ்தான் கொடியை அசைத்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதாக பரவும் தகவல்
(L-R) Google image and screengrab from viral video

இவற்றின் அடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் வீடியோ காசர்கோடு பகுதியில் 2019 ஆண்டு எடுக்கப்பட்டது என்பது உறுதியாகின்றது.

கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகுவது யாதெனில்,

  1. வைரலாகும் வீடியோ அண்மையில் எடுக்கப்பட்டதல்ல; 2019 ஆம் ஆண்டின் பழைய வீடியோவாகும்.
  2. வைரலாகும் வீடியோவில் காணப்படும் கொடி பாகிஸ்தான் கொடியல்ல; இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொடி.
  3. வைரலாகும் வீடியோ வயநாட்டில் எடுக்கப்பட்டதல்ல; காசர்கோடில் எடுக்கப்பட்டதாகும்.

 Also Read: அண்ணாமலையை கெடா மாடு என்றாரா வானதி சீனிவாசன்?

Conclusion

வயநாட்டில் பாகிஸ்தான் கொடியை அசைத்து ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Tweet from the user, @meeraremi11, Dated May 25, 2019
Report from Firstpost
Self Analysis

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular