சனிக்கிழமை, ஜூலை 27, 2024
சனிக்கிழமை, ஜூலை 27, 2024

HomeFact Checkடிரம்ப் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததா?

டிரம்ப் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: டிரம்ப் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. ஆனால் டிரம்ப் புல்லட்ப்ரூஃப் கவசம் அணிந்திருந்ததால் உயிர் தப்பினார்.

Fact: டிரம்ப் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக கூறி பரப்பப்படும் புகைப்படத்தில் காணப்படுவது குண்டின் அடையாளமல்ல, அது டிரம்பை பாதுகாக்க சூழ்ந்த பெண் காவலர் அணிந்திருந்த கோட்டில் ஏற்பட்ட மடிப்பு அல்லது சுருக்கமாகும்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பென்சில்வெனியாவில் பேரணியில் கலந்துக்கொண்டு பேசிக்கொண்டிருக்கும்போது அவர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் காதில் காயத்துடன் டிரம்ப் உயிர் தப்பினார்.

இந்நிலையில் ‘டிரம்ப் நெஞ்சிலும் சுடப்பட்டது அவர் புல்லட் புரூப் கோட் அணிந்ததால் உயிர் தப்பினார்’ என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

டிரம்ப் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

X Link | Archive Link

டிரம்ப் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மணிப்பூர் சென்ற ராகுல் காந்தியை விரட்டிய மக்கள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Fact Check/Verification

டிரம்ப் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக கூறி புகைப்படம் ஒன்று வைரலாகியதை தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் AP நியூஸ் டிரம்ப் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து வெளியிட்ட செய்தியில் வைரலாகும் படத்தின் முழு வடிவப் படம் இடம்பெற்றிருப்பதை காண முடிந்தது.

அப்படத்தை நன்கு கவனித்து பார்க்கையில் டிரம்ப் நெஞ்சில் குண்டு துளைத்ததாக பரப்பப்படும் துளை உண்மையில் குண்டடிப்பட்ட துளை இல்லை, அவரை பாதுகாக்க சூழ்ந்த பெண் காவலர் அணிந்திருந்த கோட்டில் ஏற்பட்ட மடிப்பு அல்லது சுருக்கம் என அறிய முடிந்தது.

டிரம்ப் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

தொடர்ந்து  தேடியதில் abcnews-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இப்படம் பகிரப்பட்டிருந்ததை காண முடிந்தது. அதிலும் பெண் காவலர் அணிந்திருந்த கோட்டில் ஏற்பட்டிருந்த மடிப்பு அல்லது சுருக்கத்தை தெளிவாக காண முடிந்தது.

டிரம்ப் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

இது தவிர்த்து வேறு சில ஊடகங்களின்  செய்திகளிலும் இப்படம் பயன்படுத்தப்பட்டிருந்தது. அப்படங்களிலும் அந்த மடிப்பை காண முடிந்தது. அச்செய்திகளை இங்கே, மற்றும் இங்கே காணலாம்.

  Also Read: ஆம்ஸ்ட்ராங் ஒரு குற்றவாளி என்று நியூஸ்கார்ட் வெளியிட்டதா புதியதலைமுறை?

Conclusion

டிரம்ப் நெஞ்சில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததாக கூறி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் புகைப்படத்தில் காணப்படுவது குண்டின் அடையாளமல்ல, அது டிரம்பை பாதுகாக்க சூழ்ந்த பெண் காவலர் அணிந்திருந்த கோட்டில் ஏற்பட்ட மடிப்பு அல்லது சுருக்கமாகும்.

இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Report from AP News, Dated July 14, 2024
Instagram post from ABC News, Dated July 14, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular