வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkஅம்மாவை மதிக்காமல் சென்றாரா விஜய்?

அம்மாவை மதிக்காமல் சென்றாரா விஜய்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: கட்சிக்கொடி அறிமுக விழாவுக்குப்பின் அம்மாவை மதிக்காமல் சென்றார் விஜய்.

Fact: இத்தகவல் தவறானதாகும். விஜய் அவரின் அம்மாவிடம் திரும்பி பேசிவிட்டே சென்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா நேற்று சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த விழா முடிந்தப்பின்பு நடிகரும் தவெக தலைவருமான விஜய் அவரது அம்மா அவரை அழைத்தபோது அதை கண்டுக்கொள்ளாமல் சென்றதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கட்சிக்கொடி அறிமுக விழாவுக்குப்பின் அம்மாவை மதிக்காமல் சென்றார் விஜய்.

X Link | Archive Link

கட்சிக்கொடி அறிமுக விழாவுக்குப்பின் அம்மாவை மதிக்காமல் சென்றார் விஜய்.

Archive Link

கட்சிக்கொடி அறிமுக விழாவுக்குப்பின் அம்மாவை மதிக்காமல் சென்றார் விஜய்.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ஆகஸ்ட் 18 முதல் 20 வரை விண்ணப்பிக்கலாமா?

Fact Check/Verification

கட்சிக்கொடி அறிமுக விழாவுக்குப்பின் தவெக தலைவர் விஜய் அவரது அம்மாவை மதிக்காமல் சென்றதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து அதுக்குறித்து ஆராய்ந்தோம்.

அந்த ஆய்வில் “கட்சிக்கு தலைவரா இருந்தாலும்.. அம்மாக்கு புள்ள தான்…” என்று தலைப்பிட்டு கலாட்டா மீடியா வீடியோ ஒன்றை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அவ்வீடியோவில் விஜய் திரும்பி அவரின் அம்மாவிடம் பேசிவிட்டு செல்வதை காண முடிந்தது.

கட்சிக்கொடி அறிமுக விழாவுக்குப்பின் அம்மாவை மதிக்காமல் சென்றார் விஜய்.

தொடர்ந்து தேடுகையில் தி சினிமாஸ் எனும் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவிலும் விஜய் அவரின் அம்மாவிடம் திரும்பி பேசுவதை காண முடிந்தது.

கட்சிக்கொடி அறிமுக விழாவுக்குப்பின் அம்மாவை மதிக்காமல் சென்றார் விஜய்.

இதன்படி பார்க்கையில் விஜயின் அம்மா அவரை அழைக்கும்போது அவர் திரும்பி பேசிவிட்டே சென்றுள்ளார் என அறிய முடிகின்றது. விஜய்யும் அவரது அம்மாவும் பேசும் இந்த நிகழ்வில்  பாதிப்பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு விஜய் அவரின் அம்மாவை மதிக்காமல் சென்றதாக பரவும் இந்த பொய் தகவல் பரப்பப்பட்டு வருகின்றது.

இதனையடுத்து தேடுகையில் விஜய் மேடைக்கு செல்லும் முன் பெற்றோரிடம் ஆசி வழங்கியதாக ரெட்நூல் வீடியோ வெளியிட்டிருப்பதை காண முடிந்ததை.

அதேபோல் மேடையில் பேசும்போது விஜய் அவரின் பெற்றோருக்கு நன்றி தெரிவித்திருப்பதையும் காண முடிந்தது. இவ்வீடியோவானது பாலிமர் நியூஸ் வெளியிட்டிருந்தது.

 Also Read: தர்மபுரி தொப்பூர் கணவாயில் கோர விபத்து என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Conclusion

கட்சிக்கொடி அறிமுக விழாவுக்குப்பின் தவெக தலைவர் விஜய் அவரது அம்மாவை மதிக்காமல் சென்றதாக பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் விஜய் அவரின் அம்மாவிடம் திரும்பி பேசிவிட்டே சென்றார். இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Facebook Post By Galatta Media, Dated August 22, 2024
YouTube Video by The Cinemas, Dated August 22, 2024
YouTube Video by Rednool, Dated August 22, 2024
YouTube Video by Polimer News, Dated August 22, 2024

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular