ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 20, 2024
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 20, 2024

HomeFact Checkநிர்வாண பணிகளில் திருப்தியில்லை.... நடிகை கஸ்தூரி பெயரில் வைரலாகும் போலி டிவீட்

நிர்வாண பணிகளில் திருப்தியில்லை…. நடிகை கஸ்தூரி பெயரில் வைரலாகும் போலி டிவீட்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: “நிர்வாண பணிகளில் திருப்தியில்லை இன்னும் சிறப்பாக செயல்படனும்” என்று நடிகை கஸ்தூரி எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார்.

Fact: வைரலாகும் எக்ஸ் தளப் பதிவு போலியானதாகும். நடிகை கஸ்தூரி இதை உறுதி செய்துள்ளார்.

“நிர்வாண பணிகளில் திருப்தியில்லை இன்னும் சிறப்பாக செயல்படனும்” என்று நடிகை கஸ்தூரி அவரது எக்ஸ் தளத்தில் பதிவு செய்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

நிர்வாண பணிகளில் திருப்தியில்லை இன்னும் சிறப்பாக செயல்படனும்” என்று நடிகை கஸ்தூரி எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார்.

X Link | Archive Link

“நிர்வாண பணிகளில் திருப்தியில்லை இன்னும் சிறப்பாக செயல்படனும்” என்று நடிகை கஸ்தூரி எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார்.

Archive Link

“நிர்வாண பணிகளில் திருப்தியில்லை இன்னும் சிறப்பாக செயல்படனும்” என்று நடிகை கஸ்தூரி எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார்.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: மழை வெள்ளத்தில் சத்யபாமா பல்கலைக்கழக மாணவர்கள் அவதி என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check/Verification

நிர்வாண பணிகளில் திருப்தியில்லை இன்னும் சிறப்பாக செயல்படனும்” என்று நடிகை கஸ்தூரி எக்ஸ் தளத்தில் பதிவு செய்ததாக புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து அவரது எக்ஸ் பக்கத்தில் ஆய்வு செய்தோம்.

அதில் வைரலாகும் பதிவை அவர் பதிவிட்டிருக்கவில்லை. மாறாக வைரலாகும் படத்தில் இடம்பெற்றுள்ள் #ChennaiRainsUpdate என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி “எங்க ஏரியா. இப்போ. வீட்டுக்குள்ள தண்ணி வேகமா புகுந்துக்கிட்டு வருது. முன்கூட்டி எச்சரிச்சதுனால கொஞ்சம் prepare ஆயிட்டோம், ஆனாலும் damage தான். எங்கேயுமே தண்ணி தேங்கலைன்னு சொல்லித் திரியுற வெட்கம் கெட்ட அமைச்சருங்க, டிவி, ஊடகம் யாராச்சும் அகப்பட்டீங்க…” என்று கஸ்தூரி பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

இதனையடுத்து நடிகை கஸ்தூரியை தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு வைரலாகும் டிவீட் குறித்து விசாரிக்கையில் இது போலியாக உருவாக்கப்பட்டது என உறுதி செய்தார்.

இது தொடர்பான ஆடியோ உங்கள் பார்வைக்கு:

Also Read: சென்னையில் கடும் மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளதாக பரவும் 2015 ஆம் ஆண்டின் படம்!

Conclusion

“நிர்வாண பணிகளில் திருப்தியில்லை இன்னும் சிறப்பாக செயல்படனும்” என்று நடிகை கஸ்தூரி அவரது எக்ஸ் தளத்தில் பதிவு செய்ததாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். இந்த உண்மையானது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone Conversation with Actress Kasthuri
Self Analysis

உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular