Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகில் சத்ரபதி சிவாஜி சிலை இன்று நிறுவப்பட்டது.
Fact: வைரலாகும் வீடியோ கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வுடையதாகும்.
காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
” எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகில் சத்ரபதி சிவாஜி சிலை தேசத்தின் அடையாளம் காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகில் (குப்வாராவில்) சத்ரபதி சிவாஜி யின் திருவுருவச் சிலை இன்று நிறுவப் பட்டது. ராஷ்ட்ரீய ரைஃபைலஸ் & 41 மராட்டா லைட் ரிஜிமென்ட் படை வீரர்கள் குப்வாராவில் சிலைக்கு உற்சாகமாக வரவேற்பு வழங்கினர். சிலை 2200 கிமீ யாத்திரையாக கொண்டு வரப்பட்டுள்ளது.” என்று இந்த வீடியோ பரவுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: டிரம்ப், எலான் மஸ்க் காவி உடையில் இருப்பதாக பரவும் எடிட் படம்!
Fact Check/Verification
காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ஆராய்ந்தபோது கடந்த நவம்பர் 07, 2023 அன்று ஜம்மு காஷ்மீரின் எல்லையில் கட்டுப்பாட்டுக் கோடு அருகில் அமைந்துள்ள குப்வாராவில் மன்னர் சத்ரபதி சிவாஜி சிலையை மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே திறந்து வைத்திருந்தார். இதற்காக, மகாராஷ்டிராவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சிலையை ராஷ்டிரிய ரைபிள்ஸ் 41 மராத்தா லைட் வீரர்கள் ஊர்வலமாக எடுத்துவந்த வீடியோ இது என்பதை அறிந்து கொண்டோம்.
குறிப்பிட்ட வீடியோவே, தற்போதைய ஒன்று என்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Also Read: இளம் பெண் போன்ற ரோபோ சீனத் தெருக்களில் சுற்றித்திரிவதாகப் பரவும் வீடியோ உண்மையா?
Conclusion
காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை என்று பரவும் வீடியோ கடந்த 2023ஆம் ஆண்டு நிறுவப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Missing Context
Our Sources
Report From, Indian Express, Dated November 07, 2023
YouTube Video From, MyGov India
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.