வெள்ளிக்கிழமை, டிசம்பர் 20, 2024
வெள்ளிக்கிழமை, டிசம்பர் 20, 2024

HomeFact Checkநாடாளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளிலும் அம்பேத்கர் படம் வைக்கப்பட்டதா?

நாடாளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளிலும் அம்பேத்கர் படம் வைக்கப்பட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளிலும் அம்பேத்கர் படம் வைத்து போராட்டம்.

Fact: இத்தகவல் தவறானதாகும். வைரலாகும் படம் நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்டதல்ல. அப்படம் கர்நாடக சட்டமன்றத்தில் எடுக்கப்பட்டதாகும்.

ஒன்றிய அமைச்சர் அண்ணல் அம்பேத்கர் குறித்த பேசிய பேச்சு நாடு முழுவதும் பெறும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நாடாளுமன்றத்தில் அமித் ஷாவை கண்டித்து அனைத்து இருக்கைகளிலும் அம்பேதகர் படம் வைத்து போராட்டம் நடத்தப்பட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளிலும் அம்பேத்கர் படம் வைத்து போராட்டம்.

Post Link | Archive Link

அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளிலும் அம்பேத்கர் படம் வைத்து போராட்டம்.

Archive Link

அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளிலும் அம்பேத்கர் படம் வைத்து போராட்டம்.

Archive Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: ‘வங்கதேச இந்துக்களை பற்றி எனக்கு கவலையில்லை’ என்று எழுதப்பட்ட கைப்பையை பிரியங்கா காந்தி வைத்திருந்தாரா?

Fact Check/Verification

அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளிலும் அம்பேத்கர் படம் வைத்து போராட்டம் நடத்தப்பட்டதாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, அப்படம் குறித்து தேடினோம்.

இத்தேடலில் “Ruckus in Karnataka assembly over alleged remarks on Dalit icon BR Ambedkar” என்று தலைப்பிட்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் படத்தை பயன்படுத்தி இருந்ததை காண முடிந்தது.

அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளிலும் அம்பேத்கர் படம் வைத்து போராட்டம்.

கர்நாடக சட்டசபையில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை அமித் ஷா பேசியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குற்றம் சாட்டியதாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடியதில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வைரலாகும் படத்தை பயன்படுத்தி பதிவு ஒன்று பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அப்பதிவில் அம்பேத்கர் குறித்து இழிவாக பேசிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவை எதிர்த்து கர்நாடக சட்டசபையில் போராட்டம் நடத்ததப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளிலும் அம்பேத்கர் படம் வைத்து போராட்டம்.

கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் படம் நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்டதல்ல; கர்நாடக சட்டசபையில் எடுக்கப்பட்டது என உறுதியாகின்றது.

Also Read: உதயநிதி தன்னை ஒரு கிறிஸ்துவர் என்று பெருமையாக கூறியதாக பரவும் செய்தி உண்மையா?

Conclusion

அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்றத்தின் அனைத்து இருக்கைகளிலும் அம்பேத்கர் படம் வைத்து போராட்டம் நடத்தப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும். உண்மையில் வைரலாகும் புகைப்படம் இந்திய நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்டதல்ல, அப்படம் கர்நாடக சட்டமன்றத்தில் எடுக்கப்பட்டதாகும்.

இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Partly False

Our Sources
Report from TOI, Dated December 19, 2024
Instagram post from Siddaramaiah, Chief minister of Karnataka, Dated December 19, 2024

உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

Most Popular