Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Coronavirus
சென்னை மின்மயானத்தில் சடலங்கள் எரியூட்டப்படுவதற்காக வரிசையாக நடைபாதையில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 36, 184 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இன்றுமட்டும் கொரோனா தொற்றால் 467 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவிற்கு 109 பேர் பலியாகியுள்ளனர். மேலும், மருத்துவமனைகளில் இட நெருக்கடியும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சூழ்நிலையில், சென்னை மின்மயானம் ஒன்றின் வெளியில் நடைபாதையில் நூற்றுக்கணக்கான சடலங்கள் எரியூட்டலுக்காக காத்திருப்பதாக “சென்னை மின் மயானத்தில் நிகழும் அவலம்” என்கிற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது. BJP Ramkumar என்பவர் இதனை முதலில் ஷேர் செய்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
சென்னை மின்மயானத்தில் நிகழும் அவலம் என்று பரவும் புகைப்படம் குறித்த உண்மைத்தன்மை அறிய அதனை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம்.
அதன்முடிவில், நமக்கு ஃப்ரண்ட்லைன் செய்தித்தளத்தில் கட்டுரை ஒன்று கிடைத்தது. அக்கட்டுரையின் மூலமாக முக்கிய கீவேர்டுகளை வைத்து நாம் நம்முடைய தேடுதலை மேலும் தொடர்ந்தோம்.
அதன்முடிவில், அவுட்லுக் இந்தியாவில் குறிப்பிட்ட அப்புகைப்படம் கடந்த ஏப்ரல் 22, 2021 அன்று பகிரப்பட்டுள்ளது நமக்குக் கிடைத்தது. அப்புகைப்படம் காசியாபாத்தில் ஹிந்தோன் ரிவர் மயானத்திற்கு வெளியில் இறுதிச்சடங்கிற்காக காத்து நின்ற கொரோனா நோயாளிகளின் சடலங்கள் என்பது நமக்கு உறுதியானது.
மேலும், குறிப்பிட்ட அப்புகைப்படமானது வைரல் பதிவில் க்ராப் செய்யப்பட்டுள்ளதும் நமக்குத் தெரிய வந்தது. மயானத்தின் முன்புறப்பக்கம் வைரல் புகைப்படத்தில் எடிட் செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரமாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் கட்டுரை ஒன்றிணையும் இங்கே இணைத்துள்ளோம்.
இதன்மூலம், யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி வகிக்கின்ற உத்திர பிரதேச மாநிலத்தின், காசியாபாத் நகரில் அமைந்துள்ள ஹிந்தோன் மயானத்திற்கு வெளியே வரிசை கட்டி நின்ற கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அவை என்பது நமக்கு உறுதியானது.
எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சடலங்கள் அவை என்றாலும் குறிப்பிட்ட அப்புகைப்படம் சென்னையில் எடுக்கப்பட்டது அல்ல என்பது இதன்மூலமாக தெளிவாகிறது.
சென்னை மின்மயானத்தில் நிகழும் அவலம் என்று பரவும் புகைப்படம் தவறானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Outlook:https://www.outlookindia.com/photos/dayin/4/22/2021?photo-265164
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
December 23, 2024
Vijayalakshmi Balasubramaniyan
November 6, 2024
Vijayalakshmi Balasubramaniyan
September 10, 2024