பதஞ்சலி நிர்வாகத் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறி விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
Archive Link: https://archive.ph/aaN6y
சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒறு வைரலாகி வருகின்றது. அவ்வீடியோவில் பதஞ்சலி நிர்வாகத் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா முகத்தில் ஆக்ஸிஜன் முகமூடியுடன் மருத்துவமனை படுக்கையில் முனகிக் கொண்டிருக்கின்றார். அருகில் பாபா ராம்தேவ் அவருக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கின்றார்.
இவ்வீடியோவானது, “ கோமியம் குடித்தால் கொரோனா சரியாகி விடும் என்று சொல்லியவன் இன்று தனக்கு கோவிட் வந்து சுவாசிக்க முடியாமல் போனதும் கோமியத்தை குடிக்காமல் பிரபல தனியார் மருத்துவமனைக்கு வந்து அட்மிட் ஆகியுள்ளான். ஊருக்கு தான் உபதேசம்.” என்று கூறி சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.

Archive Link: https://archive.ph/8HhLJ

Archive Link: https://archive.ph/EAAff

Archive Link: https://archive.ph/ILeh1
Fact Check/Verification
பதஞ்சலி நிர்வாகத் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இதன் பின்னணியில் இருந்த உண்மைத்தன்மை குறித்து அறிய இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
இதில் வைரலாகும் வீடியோவா 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதென்பது நமக்கு தெரிய வந்தது. கடந்த 2019 ஆண்டு ஆச்சார்யா அவர்களுக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர்.
இச்சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது அவர் கொரானாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறி தற்சமயம் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது.
இந்நிகழ்வு குறித்து பல ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இந்த பொய் செய்தியானது இந்தியிலும் பரவியுள்ளது. நம் நியூஸ்செக்கரின் இந்தி துறையினர் அதுகுறித்து விரிவாக விசாரித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டுள்ளார்கள். அச்செய்தியை இங்கே படிக்கலாம்.
Conclusion
பதஞ்சலி நிர்வாகத் தலைவர்ஆச்சார்யா பாலகிருஷ்ணா கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறி வைரலாகும் வீடியோ பழைய வீடியோவாகும். 2019 ஆம் ஆண்டு நெஞ்சு வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இவ்வீடியோவானது எடுக்கப்பப்பட்டதாகும்.
இந்த உண்மையை உரிய ஆதாரத்துடன் நியூஸ்செக்கர் சார்பில் விளக்கியுள்ளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
News 360 Live: https://www.youtube.com/watch?v=VF9ljp4wnpg
India Today: https://www.indiatoday.in/india/story/yoga-guru-ramdev-aide-balkrishna-admitted-aiims-1590933-2019-08-23
Business Today: https://www.businesstoday.in/latest/trends/baba-ramdev-aide-balkrishna-admitted-to-aiims/story/374939.html
Livemint: https://www.livemint.com/news/india/ramdev-s-aide-balkrishna-admitted-to-aiims-1566571281924.html
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)