திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeEntertainmentFact Check: பகாசூரன் திரைப்படத்தை நடிகர் அஜித்குமார் பாராட்டியதாக பரவும் பொய் செய்தி!

Fact Check: பகாசூரன் திரைப்படத்தை நடிகர் அஜித்குமார் பாராட்டியதாக பரவும் பொய் செய்தி!

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பகாசூரன் திரைப்படத்தை நடிகர் அஜித்குமார் பாராட்டியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

நடிகர் அஜித் பகாசூரன் திரைப்படத்தை பாராட்டியதாக பரவும் நியூஸ்கார்ட்

திரௌபதி, ருத்ரதாண்டவம் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று பகாசூரன் என்ற திரைப்படம் திரைக்கு வந்தது. இத்திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், நட்டி என்கிற நட்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இத்திரைப்படத்தை நடிகர் அஜித்குமார் பாராட்டியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. “மகளைப் பெற்ற ஒவ்வொரு தந்தையும் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டிய திரப்படம் பகாசூரன். இந்திய சினிமாவில் முக்கிய திரைப்படம் இது!” என்று அஜித்குமார் கூறியதாக வைரலாகும் நியூஸ்கார்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நடிகர் அஜித் பகாசூரன் திரைப்படத்தை பாராட்டியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from Facebook/kavi.vimala.16
நடிகர் அஜித் பகாசூரன் திரைப்படத்தை பாராட்டியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from Facebook/மஞ்சள் படை
நடிகர் அஜித் பகாசூரன் திரைப்படத்தை பாராட்டியதாக பரவும் நியூஸ்கார்ட்
Screengrab from Facebook/marimuthu.vanniyar

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அதிமுகவுக்கு 63% வெற்றி வாய்ப்பு உள்ளதாக தந்தி தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு வெளியிட்டதா?

Factcheck / Verification

பகாசூரன் திரைப்படத்தை நடிகர் அஜித்குமார் பாராட்டியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

நம் ஆய்வில் பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப், நடிகர் ஜீவா, நடிகர் யோகி பாபு, நடிகர் கார்த்தி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா போன்றோர்  பகாசூரன் படத்தை பாராட்டி பேசியிருப்பதை காண முடிந்தது. ஆனால் நடிகர் அஜித்குமார் பாராட்டியதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து வைரலாகும் இத்தகவல் பாலிமர் தொலைக்காட்சியின் லோகோவை பயன்படுத்தி பரப்பப்படுவதால், பாலிமர் தொலைக்காட்சி இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளதா என அந்நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் இவ்வாறு ஒரு செய்தியை அந்நிறுவனம் வெளியிட்டதற்கான எந்த தரவும் நமக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து பாலிமர் தொலைக்காட்சியை சேர்ந்த சுரேந்தர் அவர்களை தொடர்புக் கொண்டு   விசாரிக்கையில், அது போலியானது, அதை நாங்கள் வெளியிடவில்லை என்று தெளிவுப்படுத்தினார்.

Also Read: மறைந்த நடிகர் மயில்சாமிக்கு கந்துவட்டிக்கு நடிகர் ரஜினிகாந்த் பணம் கொடுத்திருந்ததாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Conclusion

பகாசூரன் திரைப்படத்தை நடிகர் அஜித்குமார் பாராட்டியதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Phone Conversation with Surendar, Polimer News, dated February 21, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular