புதன்கிழமை, மே 1, 2024
புதன்கிழமை, மே 1, 2024

HomeFact Checkஹெச்.ராஜா மனநல காப்பக வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டாரா?

ஹெச்.ராஜா மனநல காப்பக வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: ஹெச்.ராஜா மனநல காப்பக வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டார்.

Fact: வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்

பாஜக மூத்தத்தலைவர் ஹெச்.ராஜா சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரியும் கடந்த திங்களன்று (11/09/2023) திருச்சி அறநிலையத்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதன் காரணமாக போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ஹெச்.ராஜா மனநல காப்பக வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

ஹெச்.ராஜா மனநல காப்பக வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறி வைரலாகும் படம்

X Link | Archived Link

ஹெச்.ராஜா மனநல காப்பக வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறி வைரலாகும் படம்

Facebook Link

ஹெச்.ராஜா மனநல காப்பக வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறி வைரலாகும் படம்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டிலிருந்தே வழிபடக் கூறிய அமைச்சர் சேகர் பாபு என்று பரவும் பழைய செய்தி!

Fact Check/Verification

ஹெச்.ராஜா மனநல காப்பக வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறி புகைப்படம் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

அந்த ஆய்வில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என்பது தெரிய வந்தது. ஹெச்.ராஜாவின் அதிகாரப்பூர்வ X தளப் பக்கத்தில் திங்களன்று அவர் கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் இதே படத்தை பகிர்ந்திருப்பதை நம்மால் காண முடிந்தது.

ஆனால் அப்படத்தில் ஹெச்.ராஜாவை அழைத்து செல்லும் வாகனத்தில் வைரலாகும் படத்தில் உள்ளது போல் ‘மனநல காப்பகம், திருச்சி’  எனும் வாசகம் இடம்பெற்றிருக்கவில்லை.

இதனடிப்படையில் காண்கையில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான படத்தையும், எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

Also Read: சவுதி அரேபியாவில் பிரதமர் மோடிக்கு தங்கத்தில் சிலை என்று பரவும் வீடியோ உண்மையா?

Conclusion

ஹெச்.ராஜா மனநல காப்பக வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக கூறி வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்ட போலியான படமாகும். இந்த உண்மையை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered photo

Our Sources
X Post from H.Raja, Dated September 11, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular