Claim: 2026 தேர்தலில் தன் சொந்த மகனுக்கு சீட் தருவேன் என்றார் சீமான்.
Fact: நாதக சார்பில் தஞ்சையில் போட்டியிடும் ஹுமாயூன் கபீரின் மகனையையே தன் மகன் என்று சீமான் கூறியதாக நாதக தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை (23/03/2024) அன்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாதக சார்பில் போட்டியிடும் 40 வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் நடைப்பெற்ற நிலையில், “2026 தேர்தலில் என் மகன் பெரியவனுக்கும் சீட்” என்று சீமான் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்றை சன் நியூஸ் வெளியிட்டுள்ளது. இந்த நியூஸ்கார்டில் சீமான் குடும்பத்தினருடன் இருக்கும் படம் பயன்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நியூஸ்கார்டை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
