இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளதாக அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

நடிகர் சூர்யா, சினிமாத்துறையில் மட்டுமின்றி தன்னுடைய திரைப்படங்களால் அரசியல் கருத்துக்களிலும் ஆதிக்கம் செலுத்துபவர். தன்னுடைய அகரம் பவுண்டேஷன் மூலமாக பல்வேறு கல்வி மற்றும் நலத்திட்ட உதவிகளையும் முன்னெடுத்து வருகிறார்.
இந்நிலையில், மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அதற்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளதாக அறிக்கை ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: நடிகைகளை பாஜக தள்ளி வைக்க வேண்டும் என்றாரா தமிழ்நாடு பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்?
Fact check/Verification
இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டதாகப் பரவுகின்ற செய்தி குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட அறிக்கை தொடர்பாக, சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளரும் தலைமை செயல் அதிகாரியுமான ராஜ்சேகர் பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூர்யா பெயரில் பரவுகின்ற குறிப்பிட்ட அறிக்கை “போலியானது” என்று உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக, அவரிடம் தொடர்பு கொண்டு பேசி குறிப்பிட்ட அறிக்கை போலியானது என்பதை மீண்டும் உறுதி படுத்திக் கொண்டோம்.
குறிப்பிட்ட அறிக்கை போலியானது என்பது குறித்த செய்தியை நியூஸ் 7 தமிழ் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனங்களும் பகிர்ந்துள்ளன.
குறிப்பிட்ட அறிக்கை போலியானது என்பதை மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபுவும் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

எனவே, நடிகர் சூர்யா பெயரில் பரவுகின்ற குறிப்பிட்ட அறிக்கை போலியானது என்பது உறுதியாகிறது.
Conclusion
இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டதாகப் பரவுகின்ற செய்தி போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)