நடிகைகளை பாஜக தள்ளி வைக்க வேண்டும் என்று பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

தமிழ்நாடு பாஜக பொருளாளராக பதவி வகிப்பவர் எஸ்.ஆர்.சேகர். அவர் தற்போது, “நடிகைகளை பாஜக தள்ளி வைக்க வேண்டும். யாரை தலைவராக்க வேண்டும் என்று அகில இந்திய தலைமைக்குத் தெரியும். காயத்ரி ரகுராம், குஷ்பு, நமிதா போன்ற நடிகைகளை பாஜக தள்ளி வைப்பது கட்சிக்கு நல்லது” என்று கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகிறது.


சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/Verification
நடிகைகளை பாஜக தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
குறிப்பிட்ட நியூஸ் கார்டினை எஸ்.ஆர்.சேகருக்கு அனுப்பி அதுகுறித்து கேட்டபோது, பரவுகின்ற நியூஸ் கார்டு போலியாக சித்தரிக்கப்பட்டது என்பதை நமக்கு உறுதி செய்தார்.
மேலும், நாம் கேட்டதைத் தொடர்ந்து தனது அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்திலும் குறிப்பிட்ட நியூஸ் கார்டு போலியாக சித்தரிக்கப்பட்டது என்று பதிவிட்டுள்ளார். அதில், “பொய்யை பரப்பும் புல்லர்கள் இப்போது தந்தி டிவி லோகோவில் இந்த Card க்கு எவ்வளவு Fees தம்பி உங்களுக்கு?” என்று குறிப்பிட்டுள்ளார்.
Conclusion:
நடிகைகளை பாஜக தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)