தவெக தலைவர் விஜய் கையை தோள் மீதிருந்து தள்ளிவிட்ட மாணவி என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“மாணவி மீது கைபோட்ட நடிகர் விஜய் தைரியமாக அவர் கை தூக்கி எறிந்த மாணவி. நல்லவிதமாக வளர்க்கப்பட்ட இந்த பெண்குழந்தையின் பெற்றோர்களை பாராட்டுவோம்.” என்று இந்த வீடியோ பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்பதற்கு பதிலாக ‘கட் அவுட் ஸ்டாலின்’ என்று போஸ்டர் ஒட்டினரா பாஜகவினர்?
Fact Check/Verification
தவெக தலைவர் விஜய் கையை தோள் மீதிருந்து தள்ளிவிட்ட மாணவி என்று பரவும் வீடியோ தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவின் முழுமையான பின்னணியை அறிய கடந்த ஜூன் 2024ல் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற “கல்வி விருது வழங்கும் விழா” நிகழ்வின் முழுமையான வீடியோவைப் பார்த்தோம்.
அதில், குறிப்பிட்ட மாணவியின் தோள் மீது அணைத்து நின்று போட்டோ எடுக்கும் நிலையில் தவெக தலைவர் விஜய் கைகளை எடுத்துவிட்டு அந்த மாணவி தன்னுடன் கூட வந்த மற்றொரு பெண்ணுடன் இணைந்து இரு பக்கமும் விஜய் கைகளை கோர்த்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது தெளிவாக முழு வீடியோவில் பதிவாகியுள்ளது.
மேலும், இதன்பிறகு தனது தாய் மற்றும் அந்த மற்றொரு பெண்ணுடன் இணைந்து விஜயிடம் கைகொடுத்து பேசிவிட்டே சென்றனர். அதுவும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், அந்த மாணவி விஜய் கைகளை விலக்கி விடுகின்ற காட்சியை மட்டும் கட் செய்து தவறாக பரப்பி வருகின்றனர் என்பது இதன்மூலமாக தெளிவாகியது.
Conclusion
தவெக தலைவர் விஜய் கையை தோள் மீதிருந்து தள்ளிவிட்ட மாணவி என்று பரவும் வீடியோ தகவல் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
YouTube Video by Behindwoods TV, Dated June 28, 2024