Fact Check
குரங்கு ஒன்று ஹனுமான் உருவத்தை வரைவதாகப் பரவும் வீடியோ உண்மையா?
Claim
ஹனுமான் உருவத்தை வரையும் குரங்கு
Fact
வைரலாகும் வீடியோ AI மூலமாக உருவாக்கப்பட்டதாகும்.
குரங்கு ஒன்று ஹனுமான் உருவத்தை வரைவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“கடவுள் நம்பிக்கை உள்ளவர் லைக் போடுங்க” என்று இந்த வீடியோ பரவுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தலைவன் என்று சொல்லிக்கொள்ள விஜய்க்கு தகுதியில்லை என்று விமர்சித்தாரா இயக்குநர் சேரன்?
Fact Check/Verification
குரங்கு ஒன்று ஹனுமான் உருவத்தை வரைவதாகப் பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது Ajin Joseph என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ இடம்பெற்றிருந்தது. AI தொழில்நுட்ப வல்லுனரான இவரது பக்கத்தில் இதே போன்று மேலும் பல்வேறு வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், இதுகுறித்து நியூஸ்செக்கர் அங்கம் வகிக்கும் Deep Fake Analysis (DAU) குழுவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் இந்த வீடியோவை Hiya மற்றும் WasitAI மூலமாக ஆராய்ந்து இந்த வீடியோ AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பதை உறுதி செய்தனர்.


Conclusion
குரங்கு ஒன்று ஹனுமான் உருவத்தை வரைவதாகப் பரவும் வீடியோ AI மூலமாக உருவாக்கப்பட்டது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post multiversematrix, Dated October 9, 2025
Analysis By DAU
(இக்கட்டுரை நம்முடைய நியூஸ்செக்கர் பஞ்சாபியில் முதலில் வெளியாகியுள்ளது)