Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
பஹல்கம் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 15 பேர் இஸ்லாமியர்கள்
வைரலாகும் அட்டவணை போலியானதாகும்.
பஹல்கம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் பட்டியல் என்று தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
“இந்தியா தொலைக்காட்சி செய்திகளில் இருந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழந்த நபர்களின் முழுமையான பட்டியல் இது” என்று இந்த தகவல் பரவுகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
பஹல்கம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் பட்டியல் என்று பரவும் அட்டவணை குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
பஹல்கம் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பட்டியலை கீ-வேர்டுகள் மூலமாகத் தேடியபோது India Today வெளியிட்டிருந்த முழுமையான பட்டியல் நமக்குக் கிடைத்தது.

ஏப்ரல் 24, 2025 அன்று வெளியாகிய இச்செய்தியில் பஹல்கம் தாக்குதலில் உயிரிழந்த 26 நபர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது. அதேபோன்று, Indian Express ஊடகப்பக்கத்திலும் கடந்த ஏப்ரல் 24, 2025 அன்று பட்டியல் வெளியாகியிருந்தது. இந்த பட்டியல்களுடன் சமூக வலைத்தளத்தில் வைரலாகும் பட்டியல் ஒத்துப்போகவில்லை.
உண்மையான உயிரிழந்தவர்கள் பட்டியலில் சையது ஆதில் ஹூசைன் ஷா என்கிற குதிரையோட்டி ஒருவர் மட்டுமே இஸ்லாமியர் ஆவார். உள்ளூர்க்காரரான இவர் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அதனை தடுக்க முயன்று உயிரிழந்ததாக செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தவிர உயிரிழந்தவர்களில் யாரும் இஸ்லாமியர் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், வைரலாகும் பதிவில் India TV வெளியிட்ட பட்டியல் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுடைய செய்தியிலும் இதர ஊடகங்கள் வெளியிட்டுள்ள சையது ஆதில் ஹூசைன் ஷா பெயர் இடம்பெற்றுள்ள பட்டியலே India TV பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
Also Read: காஷ்மீர் பஹல்கம் தாக்குதலில் கண் முன்னே தந்தையை இழந்த குழந்தை என்று பரவும் வீடியோ உண்மையா?
பஹல்கம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் பட்டியல் என்று பரவும் அட்டவணை போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Report By India Today, Dated April 24, 2025
Report By Indian Express, Dated April 24, 2025
Report By Deccan Herald, Dated April 23, 2025
Ramkumar Kaliamurthy
May 26, 2025
Ramkumar Kaliamurthy
May 22, 2025
Ramkumar Kaliamurthy
May 16, 2025