Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
இந்திய ராணுவத்தின் நவீனமயமாக்கலுக்கு நன்கொடை வழங்க வங்கிக் கணக்கை தொடங்கியது மத்திய அரசு.
வைரலாகும் தகவலில் கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு தவறானதாகும். போரில் மரணமடைந்த/பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு உதவ ‘ஆயுதப் படைகள் போர் விபத்து நல நிதி திட்டம்’ உள்ளது.
“நடிகர் அக்ஷய் குமார் பரிந்துரைத்த மோடி அரசின் மற்றொரு நல்ல முடிவு:*……..
*ஒரு நாளைக்கு ஒரு ரூபாய், அதுவும் இந்திய ராணுவத்துக்கு. நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில், இந்திய ராணுவத்தின் நவீனமயமாக்கல் மற்றும் போர் பகுதியில் காயம் அல்லது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு வங்கிக் கணக்கை மோடி அரசு துவக்கியது. இதில் ஒவ்வொரு இந்தியரும் அவரவர் விருப்பப்படி எந்த தொகையையும் பங்களிக்கலாம். இது ரூ.1ல் தொடங்குகிறது மற்றும் வரம்பற்றது.*
*இந்தப் பணம் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு ஆயுதங்கள் வாங்கவும் பயன்படுத்தப்படும். புதுடில்லி, *மன் கி பாத், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப்பில் மக்கள் பரிந்துரைத்தபடி, இன்றைய எரியும் சூழ்நிலையில் மோடி அரசு இறுதியாக ஒரு முடிவெடுத்து, கனரா வங்கியில் ராணுவ நல நிதி போர் விபத்து நிதிக் கணக்கைத் திறந்தது.*
*இது திரைப்பட நடிகர் அக்ஷய் குமாரின் மாஸ்டர் ஸ்ட்ரோக். இந்தியா வல்லரசாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில் 70% பேர் கூட இந்த நிதியில் தினமும் ஒரு ரூபாயை முதலீடு செய்தால், அந்த ஒரு ரூபாய் ஒரு நாளைக்கு 100 கோடியாக மாறும். 30 நாட்களில் 3000 கோடிகள், ஒரு வருடத்தில் 36000 கோடிகள். பாகிஸ்தானின் ஆண்டு பாதுகாப்பு பட்ஜெட் ரூ.36,000 கோடி கூட இல்லை. தேவையில்லாத வேலைக்கு தினமும் 100, 1000 ரூபாய் செலவழிக்கிறோம், ஆனால் ராணுவத்திற்கு ஒரு ரூபாய் கொடுத்தால் நிச்சயம் இந்தியா வல்லரசாகும்.*
*உங்கள் பணம் நேரடியாக ராணுவ உதவி மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் போர் விபத்து நிதியில் டெபாசிட் செய்யப்படும். இராணுவ உபகரணங்கள் மற்றும் இராணுவ வீரர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்*
*எனவே இந்த பிரச்சாரத்தில் இணைந்து ராணுவத்திற்கு நேரடியாக உதவுங்கள்.*
மற்ற நாடுகளை பற்றி கெட்ட வார்த்தைகளால் திட்டி, சாலைகளை மறித்து அறிக்கை விடுவதால் எதையும் சாதிக்க முடியாது. நாட்டு மக்களின் எண்ணங்களை செயல்படுத்தி உங்கள் நாட்டு ராணுவத்தை பலப்படுத்துங்கள். எனவே எந்த நாட்டினதும் உதவியின்றி தங்கள் நிலையை காட்ட முடியும் வங்கி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
*வங்கி விவரங்கள்:*
*கனரா வங்கி*
*A/C பெயர்: ராணுவ நல நிதியம் போரில் உயிரிழந்தவர்கள்,*
*A/C எண்:* *90552010165915*
*IFSC குறியீடு:* *CNRB0000267*
*தெற்கு விரிவாக்க கிளை, புது தில்லி.*”
என்று குறிப்பிட்டு தகவல் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
இந்திய ராணுவத்தின் நவீனமயமாக்கலுக்கு நன்கொடை வழங்க வங்கிக் கணக்கை மத்திய அரசு தொடங்கியதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம்.
இத்தேடலில் வைரலாகும் தகவலில் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கு தவறானது என்று மறுத்து ஏப்ரல் 27, 2025 அன்று பாதுகாப்பு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
அச்செய்திக் குறிப்பில்,
“இந்திய ராணுவத்தை நவீனமாக்குவதற்கும், போரில் காயமடைந்த அல்லது உயிரிழந்த வீரர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு நன்கொடை அளிப்பது தொடர்பாக ஒரு தவறான செய்தி வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. இந்த செய்தியில் அமைச்சரவை எடுத்த முடிவை மேற்கோள் காட்டி, இந்த திட்டத்தை முன்மொழிந்தவர் நடிகர் திரு அக்ஷய் குமார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கூறிய செய்தியில் உள்ள கணக்கு விவரங்கள் தவறானவை, இதனால் ஆன்லைன் நன்கொடைகள் செல்லத்தக்கதாகாது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், மேலும் இதுபோன்ற மோசடி செய்திகளுக்கு பலியாகக்கூடாது.
போர் நடவடிக்கைகளின் போது உயிரிழந்த அல்லது ஊனமுற்ற வீரர்களுக்கு அரசு பல நலத்திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
2020-ம் ஆண்டில், ‘ஆயுதப் படைகள் போர் விபத்து நல நிதியை ‘ அரசு நிறுவியது, இது ராணுவ நடவடிக்கைகளில் உயிர் தியாகம் செய்யும் அல்லது படுகாயமடையும் வீரர்கள்/மாலுமிகள்/விமானப்படை வீரர்களின் குடும்பங்களுக்கு உடனடி நிதி உதவி வழங்கப் பயன்படுகிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் படைவீரர் நலத் துறையின் சார்பாக இந்திய ராணுவம் இந்த நிதிக்கான கணக்குகளைப் பராமரிக்கிறது. பங்களிப்பை நேரடியாக ஆயுதப் படைகள் போர் விபத்து நல நிதியின் கணக்கில் செலுத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2124728”
என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஆங்கில செய்திக்குறிப்பை பார்க்கையில் மேற்கண்ட தகவலுடன் ஆயுதப் படைகள் போர் விபத்து நல நிதி குறித்த வங்கி கணக்குகளும் பகிரப்பட்டிருந்தது. அந்த வங்கி கணக்குகள் வைரலாகும் தகவலில் குறிப்பிடப்பட்டிருந்த வங்கி கணக்கிலிருந்து வேறுப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் போரில் ராணுவ நடவடிக்கைகளின் போது காயமடைந்த அல்லது உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிப்பதற்காக அக்டோபர் 14, 2022 அன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ‘மா பாரதி கே சபூத்’ என்ற இணையதளத்தை தொடங்கி வைத்ததாக டிசம்பர் 12, 2022 அன்று பாதுகாப்பு அமைச்சகம் செய்திக்குறிப்பு வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து இத்திட்டங்களுக்கும் அக்ஷய் குமாருக்கும் ஏதாவது தொடர்புள்ளதா என்று தேடினோம். அத்தேடலில் ‘பாரத் கே வீர்’ எனும் இணையத்தளம் மற்றும் மொபைல் செயலி அறிமுக நிகழ்வில் அக்ஷய் குமார் கலந்து உரையாற்றி இருப்பதை காண முடிந்தது. இதுக்குறித்த வீடியோவானது ஏப்ரல் 10, 2017 அன்று பிரஸ் இன்ஃபர்மேஷன் பிரோவின் யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
இதுத்தவிர்த்து ஆயுதப் படைகள் போர் விபத்து நல நிதி மற்றும் ‘பாரத் கே வீர்’ இணையத்தளம் ஆகியவற்றில் அக்ஷய் குமாரின் தொடர்பு குறித்து எந்த ஒரு தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.
Also Read: காஷ்மீர் பஹல்கம் தாக்குதலில் கண் முன்னே தந்தையை இழந்த குழந்தை என்று பரவும் வீடியோ உண்மையா?
இந்திய ராணுவத்தின் நவீனமயமாக்கலுக்கு நன்கொடை வழங்க வங்கிக் கணக்கை மத்திய அரசு தொடங்கியதாக பரப்பப்படும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி கணக்கு தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Press Release from the Ministry of Defence (Tamil), Dated April 27, 2025
Press Release from the Ministry of Defence (English), Dated April 27, 2025
Press Release from the Ministry of Defence (Tamil), Dated December 12, 2022
YouTube Video By PIB India, Dated April 10, 2017
Ramkumar Kaliamurthy
May 26, 2025
Ramkumar Kaliamurthy
May 24, 2025
Ramkumar Kaliamurthy
May 22, 2025