Fact Check
அரசு பள்ளிகளில் இந்தி கற்றுத்தரக்கோரி மாணவி சிலேட்டில் எழுதியதாக பரவும் படம் உண்மையா?
Claim
அரசு பள்ளிகளில் இந்தி கற்றுத்தரக்கோரி மாணவி சிலேட்டில் எழுதியதாக பரவும் படம்.
Fact
வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டதாகும்.
அரசு பள்ளிகளில் இந்தி கற்றுத்தரக்கோரி மாணவி ஒருவர் சிலேட்டில் எழுதியதாக புகைப்படம் ஒன்று பரவி வருகின்றது.
அப்படத்தில், “திராவிடமாடல் அரசே… அரசு பள்ளிகளில் இந்தியை கற்று கொடு! அல்லது இந்தியை கற்று கொடுக்கும் தனியார் கல்வி நிலையங்களை இழுத்து மூடு!! பாமரனுக்கு கிடைக்காத கல்வி யாருக்கும் வேண்டாம்!” என்று எழுதப்பட்ட சிலேட்டை சீருடை அணிந்த மாணவி ஒருவர் பிடித்திருப்பதாக இருந்தது.

இப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: ஜெயலலிதாவின் நகைகளை முதல்வர் ஸ்டாலின் நியாயமாக மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாரா அண்ணாமலை?
Fact Check/Verification
அரசு பள்ளிகளில் இந்தி கற்றுத்தரக்கோரி மாணவி ஒருவர் சிலேட்டில் எழுதியதாக புகைப்படம் ஒன்று பரவியதை தொடர்ந்து அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.
இத்தேடலில் அடோபி ஸ்டாக் (Adobe Stock) இணையத்தளத்தில் “Happy smiling school girl kid holding empty slate board near paddy field – concept of education, learning and childhood empowerment” என்று தலைப்பிட்டு வைரலாகும் படம் இடம்பெற்றிப்பதை காண முடிந்தது. ஆனால் அப்படத்தில் சிறுமியின் கையில் வெறும் ஸ்லேட்டே இருந்தது. ஸ்லேட்டில் எவ்வித வாசகமும் இடம்பெற்றிருக்கவில்லை.

தொடர்ந்து தேடுகையில் வேறு சிலை ஸ்டாக் புகைப்படங்கள் விற்கும் தளங்களிலும் இதே படம் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது. அவற்றிலும் அச்சிறுமி கையில் இருந்த ஸ்லேட்டில் எவ்வித வாசகமும் இடம்பெற்றிருக்கவில்லை. அவற்றை இங்கே, இங்கே மற்றும் இங்கே காணலாம்.
இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது என்பது தெளிவாகின்றது.
Also Read: விஜயகாந்துக்கு ஏற்பட்ட கதிதான் அண்ணாமலைக்கும் ஏற்படும் என்று எச்சரித்தாரா பேராசிரியர் ஜவாஹிருல்லா?
Conclusion
அரசு பள்ளிகளில் இந்தி கற்றுத்தரக்கோரி மாணவி ஒருவர் சிலேட்டில் எழுதியதாக பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாகும். உண்மையில் அம்மாணவி கையில் வெறும் சிலேட்டே இருந்தது. அந்த சிலேட்டில் எந்த ஒரு வாசகமும் இடம்பெற்றிருக்கவில்லை.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Photo from Adobe Stock