தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை தந்திருக்க கூடாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மத்திய அரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை தர வேண்டும் என்று தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் நெடுங்காலமாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த செவ்வாயன்று (31/05/2022) அனைத்து நிலுவைத் தொகையையும் விடுவிப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், “ஜிஎஸ்டி நிலுவைத்தொகை தராமல் தமிழக அரசை அலைய விட்டிருக்கலாம். தமிழ்நாடு பாஜகவின் எதிர்ப்பையும் மீறி ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை நிர்மலா சீதாராமன் வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.


Also Read: சவுதி அரேபியாவை விட குஜராத்தில் பெட்ரோல் விலை குறைவு என்றாரா அண்ணாமலை?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை தந்திருக்க கூடாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் வைரலானதைத் தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.
வைரலாகும் நியூஸ்கார்டானது விகடன் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி பரப்பப்படுவதால், இந்நிறுவனம் இந்த வெளியிட்டதா என உறுதி செய்ய விகடனின் சமூக ஊடகப் பக்கங்களை ஆய்வு செய்தோம். இதில் விகடன் இந்த நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து விகடனின் ஆசிரியர் குழுவில் ஒருவரான ஐ.பிரிட்டோ அவர்களை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரிக்கையில், அந்த நியூஸ்கார்டை விகடன் வெளியிடவில்லை, அது போலியான நியூஸ்கார்ட் என்று பதிலளித்தார்.
இதனையடுத்து தமிழக பாஜகவின் சமூக ஊடகத் தலைவர் நிர்மல்குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரிக்கையில். அது பொய்யான செய்தி என்று உறுதி செய்தார்.
Conclusion
தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை தந்திருக்க கூடாது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.
ஆகவே வாசகர்கள் வைரலாகும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
Result: False/ Fabricated
Sources
Phone Conversation With Nirmalkumar, IT Wing State President, BJP on 02 June 2022
Phone Conversation With Britto, Vikatan on 02 June 2022
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)