டயர்களை பயன்படுத்தி 2026ல் பாஜக வண்டி தமிழகத்தில் ஓடும் என்று அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
”வண்டி ஓடவேண்டும் என்றால் அதற்கு டயரும் முக்கியம். டயர்களை பயன்படுத்திக்கொண்டு 2026ல் பாஜக வாகனம் தமிழ்நாட்டில் ஓடும்.எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தது குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதில்” என்று இந்த நியூஸ்கார்ட் பரவி வருகிறது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அதிமுக என்னும் பேரியக்கம் கொள்கையில் இருந்து விலகுவது மனதை ரணமாக்குகிறது என்றாரா அன்வர் ராஜா?
Fact Check/Verification
டயர்களை பயன்படுத்தி 2026ல் பாஜக வண்டி தமிழகத்தில் ஓடும் என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
வைரலாகும் நியூஸ்கார்ட் புதியதலைமுறை பெயரில் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். ஆனால், அதில் அண்ணாமலை டெல்லி பயணம் குறித்த நியூஸ்கார்டுகளே இடம்பெற்றிருந்தது.
எனவே, இந்த நியூஸ்கார்ட் குறித்து புதியதலைமுறை டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் இவானியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இந்த நியூஸ்கார்ட் போலியானது; இப்படி எந்த செய்தியையும் புதியதலைமுறை வெளியிடவில்லை” என்று விளக்கமளித்தார்.
Also Read: குப்பைத் தொட்டியில் மு.க.ஸ்டாலின் படம் ஒட்டப்பட்டதாக பரவும் படம் உண்மையானதா?
Conclusion
டயர்களை பயன்படுத்தி 2026ல் பாஜக வண்டி தமிழகத்தில் ஓடும் என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Facebook Post From, Puthiyathalaimurai, Dated March 27, 2025
Phone conversation with Ivani, Puthiyathalaimurai, Dated March 27, 2025