வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024
வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

HomeFact Checkரகசிய கேமரா பதிவு மற்றும் உளவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

ரகசிய கேமரா பதிவு மற்றும் உளவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Claim: அண்ணாமலைக்கு புதிய அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது..ரகசிய கேமரா பதிவுத்துறை அமைச்சராகிறார்

Fact: வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது என்று சன்நியூஸ் உறுதி செய்துள்ளது.

ரகசிய கேமரா பதிவு மற்றும் உளவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை என்று நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

”மோடி அரசு அதிரடி…அண்ணாமலைக்கு புதிய அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது..ரகசிய கேமரா பதிவுத்துறை அமைச்சராகிறார்” என்று இந்த நியூஸ்கார்ட் வைரலாகிறது.

Screenshot from X @DMKforChetpet

X Link/Archived Link

Screenshot from x @Maayon_ash

X Link/Archived Link

Screenshot from x @BalajiMS19

X Link/Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அண்ணாமலையால் அறைக்குள் நடந்ததை சொல்லக்கூட முடியாது என்றாரா தமிழிசை செளந்தரராஜன்?

Fact Check/Verification

ரகசிய கேமரா பதிவு மற்றும் உளவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை என்று பரவும் நியூஸ்கார்ட் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் சன்நியூஸ் வெளியிட்டதாகப் பரவிய நிலையில் அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தை ஆராய்ந்தோம். அதில், பிரதமர் மோடி உள்ளிட்ட அமைச்சர்களின் பதவியேற்பு குறித்த விவரங்கள் இதுபோன்ற வடிவமைப்பில் வெளியிடப்பட்டிருந்தது நமக்குக் கிடைத்தது. குறிப்பிட்ட கார்டிலேயே வைரல் செய்தியை போலியாக எடிட் செய்துள்ளனர் என்பது தெளிவாகியது.

மேலும், வைரலாகும் அமைச்சர் பதவி கேலி செய்யும் வகையிலும், அண்ணாமலை உண்மையில் அமைச்சரவையில் தற்போது இடம்பெறவில்லை  என்பதும் நமக்குத் தெரிய வந்ததால் இதுகுறித்து சன் நியூஸ் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் மனோஜ் கார்த்திக்கை தொடர்பு கொண்டு கேட்டோம்.

அப்போது அவர், “வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது. அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதாக நாங்கள் எந்த செய்தியும் வெளியிடவில்லை” என்று விளக்கமளித்தார். வைரலாகும் போலி நியூஸ்கார்டினையே பலரும் உண்மையென்று நம்பி பகிர்ந்து வருகின்றனர்.

Also Read: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுகின்றாரா?

Conclusion

ரகசிய கேமரா பதிவு மற்றும் உளவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அண்ணாமலை என்று பரவும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Our Sources
Facebook Post from Sun News Tamil, Dated June 10, 2024
Phone Conversation with, Manoj Karthick, Sun News Digital, Dated June 14, 2024


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ +91 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Vijayalakshmi Balasubramaniyan
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.

Most Popular