திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

HomeFact Checkஅண்ணாமலையை கட்சியிலிருந்து நீக்கியதா பாஜக மேலிடம்?

அண்ணாமலையை கட்சியிலிருந்து நீக்கியதா பாஜக மேலிடம்?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: அதிமுக தலைவர்களை விமர்சித்ததால் அண்ணாமலையை கட்சியிலிருந்து நீக்கியது பாஜக மேலிடம்

Fact: வைரலாகும் இத்தகவல் தவறானது என்று தந்தி தொலைக்காட்சியும் பாஜக தரப்பும் உறுதி செய்துள்ளது.

“பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களை நீக்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது பாஜக மேலிடம். அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம் என கருதாமல் அதிமுக தலைவர்களை விமர்சனம் செய்ததை அடுத்து அதிமுகவின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிய வருகிறது” என்று குறிப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அண்ணாமலையை கட்சியிலிருந்து பாஜக மேலிடம் நீக்கியதாக பரவும் தகவல்

Facebook Link | Archived Link

அண்ணாமலையை கட்சியிலிருந்து பாஜக மேலிடம் நீக்கியதாக பரவும் தகவல்

Facebook Link

அண்ணாமலையை கட்சியிலிருந்து பாஜக மேலிடம் நீக்கியதாக பரவும் தகவல்

Facebook Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: நீண்ட நேரம் டையப்பர் அணிவித்ததால் புற்றுநோய் ஏற்பட்டு குழந்தை இறந்ததாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!

Fact Check/Verification

அதிமுக தலைவர்களை விமர்சித்ததால் பாஜக தலைவர் அண்ணாமலையை கட்சியிலிருந்து பாஜக மேலிடம் நீக்கியதாக நியூஸ்கார்ட் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரித்தோம். அவர் “இத்தகவல் முற்றிலும் பொய்யானது” என்று பதிலளித்தார்.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது தந்தி தொலைக்காட்சியின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.

இத்தேடலில் தந்தி தொலைக்காட்சி இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை. மாறாக இச்செய்தி பொய்யானது என்று மறுப்பு வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

Also Read: மொரோக்கோ நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த மக்கள் தெருவில் உறங்குவதாக பரவும் தவறான வீடியோ!

Conclusion

அதிமுக தலைவர்களை விமர்சித்ததால் பாஜக தலைவர் அண்ணாமலையை கட்சியிலிருந்து பாஜக மேலிடம் நீக்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Our Sources
Phone conversation with S.G.Suryah, State Secretary, Tamilnadu BJP
Facebook post from Thanthi Tv, Dated September 20, 2023

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular