ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28, 2024

HomeFact Checkபாஜக கூட்ட பேனரில் அண்ணாமலை படம் புறக்கணிக்கப்பட்டதா?

பாஜக கூட்ட பேனரில் அண்ணாமலை படம் புறக்கணிக்கப்பட்டதா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Claim: பாஜக கூட்ட பேனரில் அண்ணாமலை படம் புறக்கணிப்பு

Fact: இது தவறானத் தகவலாகும். உண்மையில் அந்த பேனரில்  அண்ணாமலை படம் இடம்பெற்றிருந்தது.

பாஜக மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளின் கூட்டம் இன்று சென்னையில் நடந்து வருகின்றது. இந்நிலையில் இக்கூட்டமானது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இல்லாமல் தொடங்கியதாக புதிய தலைமுறை நியூஸ்கார்டு ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த கார்டில் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட படம் ஒன்று பயன்படுத்தப்பட்டிருந்தது. அப்படத்தில் காணப்பட்ட பேனரில் அண்ணாமலை படம் காணப்படவில்லை.

இதை தொடர்ந்து பாஜக முன்னாள் உறுப்பினர் காயத்ரி ரகுராம் உட்பட பலரும் அண்ணாமலை படம் புறக்கணிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 பாஜக கூட்ட பேனரில் அண்ணாமலை படம் புறக்கணிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்

X Link | Archived Link

 பாஜக கூட்ட பேனரில் அண்ணாமலை படம் புறக்கணிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்

Archived Link

 பாஜக கூட்ட பேனரில் அண்ணாமலை படம் புறக்கணிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்

Archived Link

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: தமிழக பாஜக என்னும் தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார் அண்ணாமலை என்று கூறினாரா ஹெச்.ராஜா?

Fact Check/Verification

பாஜக கூட்ட பேனரில் அண்ணாமலை படம் புறக்கணிக்கப்பட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

முன்னதாக இந்த கூட்டம் தொடர்பாக வேறு செய்திகள் வந்ததா என ஆராய்ந்தோம். அதில் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை புதிய தலைமுறை அதன் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.  அவ்வீடியோவில் அக்கூட்டத்தின் பேனர் இடம்பெற்ற காட்சி ஒன்றும் இருந்தது. அக்காட்சியில் காணப்பட்ட பேனரில் அண்ணாமலை படம் இடம்பெற்றிருந்து.   

 பாஜக கூட்ட பேனரில் அண்ணாமலை படம் புறக்கணிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்
Screengrab from Puthiya Thalaimurai

தொடர்ந்து தேடுகையில் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா X தளத்தில் பாஜக கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில் அண்ணாமலை படம் எங்கே என்று பயனர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அண்ணாமலை இடம்பெற்றிருக்கும் முழு பேனரின் படத்தை பகிர்ந்திருப்பதை காண முடிந்தது.

இதனை தொடர்ந்து புதிய தலைமுறை டிஜிட்டல் பொறுப்பாளர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் இத்தகவலுக்கு ஆதாரமாய் விளங்கும் நியூஸ்கார்டின் படம் குறித்து விசாரித்தோம். அதற்கு, அது ஃபிரேமுக்காக ஜூம் செய்து வைக்கப்பட்டது” என்று பதிலளித்தார்.

Also Read: விமான பைலட்கள் போல் அசத்தும் வந்தே பாரத் ரயில் ஓட்டுநர்கள் என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Conclusion

பாஜக கூட்ட பேனரில் அண்ணாமலை படம் புறக்கணிக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல் தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Missing Context

Our Sources
Youtube Video from Puthiya Thalaimurai, Dated October 05, 2023
X post from S.G. Suryah, State Secretary, BJP, Dated October 05, 2023

Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular