சனிக்கிழமை, ஜூலை 20, 2024
சனிக்கிழமை, ஜூலை 20, 2024

HomeFact Checkபாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு எல்.முருகன் ஆதரவு  நடிகை தலைவராகின்றாரா?

பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு எல்.முருகன் ஆதரவு  நடிகை தலைவராகின்றாரா?

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆதரவுப் பெற்ற நடிகை ஒருவரை பாஜக தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆதரவுப் பெற்ற  நடிகை ஒருவரை பாஜக தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக பரவும் நியூஸ்கார்ட்

“கட்சி நிர்வாகிகளுக்கு எதிரான தொடர் பாலியல் குற்றச்சாட்டுகள், சீனியர் நிர்வாகிகளுடனான மோதல் போக்கு, தன்னிச்சையான நடவடிக்கைகளால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுமாறு செயல்படும் காரணத்தால் பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட இருப்பதாகவும், அப்பதவியில் எல்.முருகன் ஆதரவு பெற்ற நடிகை ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன” என குறிப்பிட்டு நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆதரவுப் பெற்ற  நடிகை ஒருவரை பாஜக தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக பரவும் நியூஸ்கார்ட் -01
Screenshot from Twitter @Deva_twitt
பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆதரவுப் பெற்ற  நடிகை ஒருவரை பாஜக தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக பரவும் நியூஸ்கார்ட் -02
Screenshot from Facebook / rj.josh.39
பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆதரவுப் பெற்ற  நடிகை ஒருவரை பாஜக தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக பரவும் நியூஸ்கார்ட் -03
Screenshot from Facebook / karuththu122

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: அரசு ஊழியர்களுக்கு சோறு போடுவது டாஸ்மாக் கடைகள்தான்; டாஸ்மாக்கை மூட சொல்வது நியாயமற்றது என்றாரா அமைச்சர் செந்தில் பாலாஜி?

Fact Check/Verification

பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆதரவுப் பெற்ற  நடிகை ஒருவரை பாஜக தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக நியூஸ்கார்ட் ஒன்று  வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்து ஆய்வு செய்தோம்.

வைரலாகும் நியூஸ்கார்ட் தினமலரின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி  உருவாக்கப்பட்டிருப்பதால், இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை அந்நிறுவனம் வெளியிட்டதா என அறிய, அந்நிறுவனத்தின் சமூக ஊடக பக்கங்களில் இதுக்குறித்து தேடினோம். 

இத்தேடலில் தினமலர் இவ்வாறு நியூஸ்கார்டை வெளியிட்டதற்கான எந்த தரவும் கிடைக்கவில்லை. மாறாக வைரலாகும் செய்தி போலியானது என்று தினமலர் தரப்பிலிருந்து மறுப்பு தெரிவித்திருந்ததை காண முடிந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழக பாஜகவின் சமூக ஊடக அணி தலைவர் சிடிஆர் நிர்மல்குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் தகவல் குறித்து விசாரிக்கையில்,  இத்தகவல் பொய்யானது என பதிலளித்தார்.

Also Read: ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டதா?

Conclusion

பாஜக தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆதரவுப் பெற்ற  நடிகை ஒருவரை பாஜக தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் நியூஸ்கார்ட் போலியானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: False

Sources

Facebook Post, from Dinamalar, on December 09, 2022
Phone Conversation with CTR Nirmalkumar, BJP IT Wing, President, on December 10, 2022


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular