Claim: பாஜக ஆட்சிக்கு வந்தால் சட்டமன்றத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாது என்றார் அண்ணாமலை.
Fact: இத்தகவல் தவறானது என்று பாஜக தரப்பும், நியூஸ் தமிழ் தரப்பும் தெளிவு செய்துள்ளது.
கடந்த திங்களன்று (12/02/2024) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். இதுகுறித்து ஆளுநர் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்று ஆளுநர் அறிவுறுத்தியதாககவும், தமிழக அரசு அதை புறக்கணித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், “பாஜக ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்து நடைமுறையில் இருக்காது; சட்டமன்றத்தில் தேசிய கீதம் மட்டுமே ஒலிக்கும்” என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

